அடுத்த பயோ பிக்கில் நடிக்க தயாராகும் சூர்யா… இப்போ யாரோட கதை ?

அடிதூள்...சூர்யாவை அடுத்து இயக்க போவது இவரா ?


அடுத்த பயோபிக்

இந்நிலையில் அடுத்த பயோபிக் ஒன்றில் நடிக்க சூர்யா கையெழுத்திட்டுள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. இதுவும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் தானாம். இந்த படத்திற்கான டைரக்டர், தயாரிப்பாளர் உள்ளிட்டோரை முடிவு செய்யும் பணி நடந்து வருகிறதாம். அனைத்தும் முடிவான பிறகு இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

 வரிசைகட்டும் படங்கள்

வரிசைகட்டும் படங்கள்

சூர்யா ஏற்கனவே டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்கிடையில் டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படம் அமேசான் பிரைம் வீடியோவில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 2 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

2022 ல் தான் வாடிவாசல்

2022 ல் தான் வாடிவாசல்

இதை முடித்து விட்டு இந்த ஆண்டு இறுதியில் டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் சூர்யா. வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், அந்த படத்தின் வேலைகளை 2022 ம் ஆண்டின் மத்தியில் துவக்க திட்டமிட்டுள்ளனர். வாடிவாசல் படத்திற்கு முன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தின் வேலைகளை மூன்று மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

பாலா இயக்கும் படமும் இருக்கு

பாலா இயக்கும் படமும் இருக்கு

வாடிவாசல் படத்துடன் பாலா இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றம் அல்லது லீட் ரோலில் சூர்யா நடிக்க போகிறாராம். இப்படி வரிசையாக சூர்யா பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருவதால் அவர் நடிக்க போவதாக கூறப்படும் பயோபிக் படத்திற்கு இதுவரை தேதி முடிவு செய்யப்படவில்லை. டைரக்டர் உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்பட்ட பிறகு மற்ற விஷயங்களை இறுதி செய்ய போகிறார்களாம்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips – FilmiBeat TamilSource
Previous articleஹர்திக் பாண்டியாவுக்கு புதிய பொறுப்பு? இந்திய அணிக்கு உதவியாக உம்ரான், வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு
Next articleஅண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியாகிறது ‘அண்ணா மேலாண்மை நிலையம்’ | News7 Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here