அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் 5௦ சதவிகிதம் அதிகரிப்பு!

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் 5௦ சதவிகிதம் அதிகரிப்பு!


இந்தியாவில் முதன்மையான ஓடிடி தளங்களில் ஒன்றான அமேசான் பிரைம், சில வாரங்களுக்கு முன்பாக பிரைம் மெம்பர்ஷிப் விலையை அதிகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. அமேசான் பிரைம் சந்தா செலுத்துவதற்கு முதன்மையான காரணம், அமேசான் மெம்பர்ஷிப் கட்டணம் குறைவான விலையில் இருப்பது தான். மேலும், அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு, அமேசான் தளத்தில் வாங்கும் பொருட்கள் இலவசமாகவும், விரைவாகவும் டெலிவரி செய்யப்படும். பல்வேறு பிரைம் நன்மைகளும் வழங்கப்படும். அமேசான் தன்னுடைய பிரைம் மெம்பர்ஷிப் கட்டணங்களை உயர்த்த இருப்பதாகவும் வரும் டிசம்பர் 13 முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கே.

அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது. தற்போது மூன்று திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த விலை உயர்வின் அடிப்படையில், இது வரை ரூ. 999 க்கு வழங்கப்பட்டு வந்த ஒரு ஆண்டுக்கான அமேசான் பிரைம் சந்தா இனி ரூ. 1,499 என்று அதிகரித்துள்ளது. ஓராண்டு மெம்பர்ஷிப் உறுப்பினர் கட்டணம் மட்டுமின்றி, அமேசானின் மற்ற மெம்பர்ஷிப் கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது.

* இது வரை குவார்ட்டர்லி (மூன்று மாதங்கள்) உறுப்பினர் சந்தா கட்டணமாக ரூ. 329 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 13 முதல், மூன்று மாத கால பிரைம் மெம்பர்ஷிப் பெற இனி ரூ.459 செலுத்த வேண்டும்.

* அதே போல, ஒரு மாத வேலிடிட்டியுடன் வரும் மெம்பர்ஷிப் அமேசானில் உள்ளது. இந்த குறுகிய கால மெம்பர்ஷிப் கட்டணம் ரூ. 129 இல் இருந்து ரூ. 179 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

* அமேசான் பிரைம் சந்தா பெற விரும்புபவர்கள் டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் பெறுவது குறைந்த விலையில் ஓராண்டு சந்தாவை பெற உதவும். அதற்குப் பிறகு, சந்தா விலை ரூ.5௦௦ அதிகரிக்கும். புதிய கட்டண விவரங்கள் பற்றி அமேசான் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.

* சந்தாவின் விலை உயரும் போது, உங்களின் அனுமதியின்றி, நீங்கள் பதிவு செய்திருக்கும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருந்து அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அமேசான் முன்னரே தெரிவித்திருந்தது.

* பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், அவர்களின் மெம்பர்ஷிப் காலம் காலாவதியாகும் வரை தற்போதைய விலையிலேயே பயன்படுத்தலாம். தற்போதைய விலையில் சந்தாவைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு கடைசி தேதி டிசம்பர் 13.

Also read… ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட ஐஃபோன் சாதனங்களுக்கு இலவச சர்வீஸ்

* மெம்பர்ஷிப் விலை அதிகரித்தாலும், பிரைம் மெம்பர்ஷிப்புடன் வரும் மற்ற நன்மைகள் எதுவும் மாறாது. பிரைம் வீடியோ உடன், பிரைம் மியூசிக் உள்ளடக்கங்களையும் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் மூலம் பெறலாம். கூடுதலாக, அமேசான் தளத்தில் நீங்கள் பொருட்களை வாங்கும் போது கூடுதலான ரிவார்டுகள், சலுகைகள், புள்ளிகள், கேஷ்பேக் என்று பல கூடுதல் நன்மைகள் உள்ளன.

* பிரைம் மெம்பர்ஷிப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள், அவர்களின் மெம்பர்ஷிப் காலம் காலாவதியாகும் வரை தற்போதைய விலையிலேயே பயன்படுத்தலாம். தற்போதைய விலையில் சந்தாவைப் பெறுவதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு கடைசி தேதி டிசம்பர் 13.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous article‘நத்திங்’ நிறுவனத்தின் முதலீட்டாளர்களாக இணையும் கரண் ஜோஹர், யுவராஜ் சிங்!
Next articleரூ.250 கோடி முதலீட்டில் தமிழகத்தில் நுழையும் மும்பை இவி சார்ஜிங் க்ரூப்- முதல்வர் முன்னிலையில் புதிய ஒப்பந்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here