ஆப்பிரிக்காவில் பரவும் ‘சூப்பர் கரோனா’; ஆராய்ச்சியாளர்களை பதறவைக்கும் வைரஸ்

corona-restrictions-tightened-in-sweden


ஐரோப்பிய நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச பயணிகளை அனுமதிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.

ஐரோப்பியாவை பொறுத்தவரை இங்கிலாந்தில் 43,000 பேருக்கு, போலந்தில் 28,000 பேருக்கு, செக் குடியரசில் 25,000 பேருக்கு நெதர்லாந்தில் 24,000 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால்  ஸ்லோவாக்கியா நாட்டில் இரண்டு வாரக் காலத்திற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ஐரோப்பிய நாடுகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து வரும் மாதங்களிலும் ஐரோப்பாவில் நிலைமை மோசமாகலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகளை பல்வேறு நாடுகளும் தளர்த்தி வரும் நிலையில் ஐரோப்பா மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ளது. 

டெல்டா கரோனா பாதிப்பு காரணமாகவே இப்போது பிரிட்டன் நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பூசிகள் உயிரிழப்பையும் தீவிர கரோனா பாதிப்பையும் குறைத்தாலும் வைரஸ் பாதிப்பை தடுப்பூசி தடுப்பதில்லை. இதை உணராமல் பொதுமக்கள் இருப்பதால் தான் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | சர்ச்சைக்கு மேல் சர்ச்சை; சீக்கியர்கள் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு

இந்நிலையில், ஆப்ரிக்கா நாடான போட்ஸ்வானாவில் புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சியாளர்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. B.1.1529 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கரோனா வைரஸ் தனது ஸ்பைக் புரதத்தில் 32 மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

கரோனா வைரசில் இந்தளவுக்கு புரோத ஸ்பைக்கில் மாற்றங்கள் ஏற்படுவது இதுவே முதல்முறை என்பதால் இது ஆய்வாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வைரசுக்கு வெளியே இருக்கும் புரோத ஸ்பைக் மூலமே அவை மனித செல்களை பற்றிக்கொள்கிறது. 

இதில் ஏற்படும் சில மாற்றங்கள் வைரஸ் பரவலை அதிகரிக்கலாம். கடந்த நவ. 11ஆம் தேதி இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், அதன் பின்னர் தென் ஆப்பிரிக்கா, ஹாங்காக் நாடுகளுக்கு இந்த உருமாறிய கொரோனா பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinamani – உலகம் – https://www.dinamani.com/world/Source
Previous articleமாநாடு விமர்சனம்: `எஸ்.டி.ஆர் – எஸ்.ஜே சூர்யா- வெங்கட் பிரபு’ கூட்டணி களைகட்டியதா?!
Next article8-வது தேர்ச்சியா? உள்ளூரில் காத்திருக்கும் தமிழக அரசு வேலைகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here