இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

சுசுகி நிறுவனம் இறுதியாக எஸ்X4 திறன் கொண்ட புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் காரை வெளியீடு செய்திருக்கின்றது. ஐரோப்பிய சந்தையிலேயே இக்கார் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக சந்தைகளில் புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் காருக்கு பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில் நிறுவனம் முன்னதாக ஐரோப்பிய சந்தையில் அக்காரை அறிமுகம் செய்திருக்கின்றது.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

24,999 யூரோக்கள் என்ற மதிப்பில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்திய மதிப்பில் தோராயமாக இதன் விலை ரூ. 24.83 லட்சம் ஆகும். மோஷன் மற்றும் அல்ட்ரா என இரு விதமான ட்ரிம்களில் புதிய எஸ்-க்ராஸ் அறிமுகம் செய்யப்பபட்டிருக்கின்றது.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

முன்னதாக பார்த்து மோஷன் ட்ரிம்மின் விலையே ஆகும். அல்ட்ரா ட்ரிம்மிற்கு 29,799 யூரோக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு தோராயமாக ரூ. 29.60 லட்சம் ஆகும். புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் காரில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மைல்டு-ஹைபிரிட் தொழில்நுட்பம் தொடங்கி பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் கார் மாடலை சுசுகி நிறுவனம் ஹங்கேரியில் உள்ள எஸ்டர்கோமில் உள்ள உற்பத்தி ஆலையில் வைத்து தயாரித்திருக்கின்றது. எஸ்-க்ராஸ் கார் மாடல் 2006ம் ஆண்டில் இருந்து விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. தற்போது வெளியாகியிருக்கும் புதிய தலைமுறையானது மூன்றாம் தலைமுறை வெர்ஷன் ஆகும்.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை க்ரில் பகுதியை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. தடிமனான க்ரோம் பார், மெல்லிய ஹெட்லேம்ப் மற்றும் சுசுகி பேட்ஜ்கள் புதிய தலைமுறை எஸ்-க்ராஸின் முன் பகுதியை அலங்கரித்திருக்கின்றன. இதன் முகப்பு க்ரில் கருப்பு நிற பியானோவைப் போல் காட்சியளிக்கின்றது.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

இத்துடன், மூன்று பீம்கள் கொண்ட ஹெட்லேம்ப், உயர்த்தப்பட்ட பான்னெட் ஸ்ட்ரக்ட்சர், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர் (புதிய பனி மின் விளக்குகள்), அகலமான ஏர் இன்டேக் மற்றும் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவையும் புதிய தலைமுறை எஸ்-க்ராஸில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

இதைத்தொடர்ந்து, மேலும் சில ஹைலைட்டுகளாக வின்டோ லைன், ரேக்ட் வின்ட் ஷீல்டு, அடர்த்தியான வீல் ஆர்ச்சுகள் மற்றும் கருப்பு நிற பிளாக் கிளாடிங்குகள், 17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் வழக்கமான பாடி நிற டூர் ஹேண்டில்கள் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

முன் பக்கத்தை போலவே பின் மற்றும் பக்கவாட்டு பகுதியும் அதிக கவர்ச்சியாக காட்சியளிக்கின்றது. இதற்காக எல்இடி மின் விளக்கு, அடர் க்ரோம் பூச்சுக் கொண்ட பார்கள், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பின் புற பம்பர் மற்றும் உயரமான இடத்தில் பொருத்தப்பட்ட ஸ்டாப் லேம்ப் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

தொடர்ந்து, முந்தைய மாடலைக் காட்டிலும் அதிக இட வசதிக் கொண்டதாக புதிய தலைமுறை எஸ்-க்ராஸ் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், இது அதிக சொகுசு வசதிகள் மற்றும் பிரீமியம் தர வசதிக் கொண்ட வாகனமாக இது காட்சியளிக்கின்றது.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

சுசுகி நிறுவனம் எஸ்-க்ராஸ் காரில் 1.4 லிட்டர், 4 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 127 பிஎச்பி பவர் மற்றும் 48 வோல்டை வெளிப்படுத்தும் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் வெளிப்படுத்தும். இதன் உச்சபட்ச வேகம் 195 கிமீ ஆகும். மேலும், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 எனும் வேகத்தை இந்த மோட்டார் 9.5 செகண்டுகளில் தொட்டுவிடும்.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் தானியங்கி யூனிட்டுகளுடன் இது விற்பனைக்குக் கிடைக்கும். இதன் டாப் ஸ்பெக் வேரியண்டில் 2022 சுசுகியின் எஸ்X4 வசதி வழங்கியுள்ளது. இத்துடன், 7 இன்ச் அளவிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதி கொண்டது), ஹீடட் இருக்கைகள், சாவியில்லா நுழைவு, இரட்டை க்ளைமேட் கன்ட்ரோல், எல்இடி கன்ட்ரோல், எல்இடி ஹெட்லேம்ப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

தொடர்ந்து கூடுதல் வழக்கமான அம்சங்களாக க்ரூஸ் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டிராஃபிக் சைன் ரெகாக்னிசன் ஆகிய தொழில்நுட்ப அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் அல்ட்ரா ட்ரிம்மில் பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமிரா, பெரிய 9 இன்சிலான தொடுதிரை வசதிக் கொண்ட சேட்டிலைட் நேவிகேஷன் மற்றும் லெதர் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: All auto newsSource
Previous article30 பெரிய உருமாற்றம்.. தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா.. வல்லுனர்கள் வார்னிங்!
Next articleமேஷம், ரிஷபம், மிதுனம்; இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நவம்பர் 25 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here