இந்திய வீராங்கனைகளை வரவேற்கும் மகளிர் பிக் பாஷ் லீக் போட்டி

mandhana_LIB_PTIMAR284_12-03-2019_10_25_16xx


மந்தனா

 

ஆஸ்திரேலியாவின் மகளிர் பிக் பாஷ் லீக் (டபிள்யூபிபிஎல்) போட்டியில் 8 இந்திய வீராங்கனைகள் விளையாடுகிறார்கள்.

ஹர்மன்ப்ரீத் கெளர், ஸ்மிருதி மந்தனா தவிர மற்ற அனைவரும் முதல்முறையாக இப்போட்டியில் பங்கேற்கிறார்கள்.

7-வது டபிள்யூபிபிஎல் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. முதல்முறையாக இப்போட்டியில் 8 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளார்கள். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பெற்றதால் இந்திய வீராங்கனைகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா (சிட்னி தண்டர்), தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா, இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் (சிட்னி சிக்ஸர்ஸ்), பேட்டர்கள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கெளர் (மெல்போர்ன் ரினகேட்ஸ்), விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ் (ஹோபர்ட் ஹரிகேன்ஸ்), லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் (பிரிஸ்பேன் ஹீட்) ஆகியோர் 2021 டபிள்யூபிபிஎல் போட்டியில் பங்கேற்கிறார்கள். இம்முறை வெளிநாட்டு வீராங்கனைகளில் இந்தியர்கள் தான் அதிக அளவில் இடம்பெற்றுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆறு பேரும் நியூசிலாந்திலிருந்து இரண்டு பேரும் இலங்கை, அயர்லாந்திலிருந்து தலா ஒருவரும் விளையாடுகிறார்கள். 
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinamani – செய்திகள் – https://www.dinamani.com/sports/sports-news/Source
Previous articleஆயுத பூஜை: சென்னையிலிருந்து அரசுப் பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம்
Next articleநடிகர் விஜய்யின் அனுமன்: புஸ்ஸி ஆனந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here