இந்து சமய அறநிலையத்துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Home


தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 12.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணிகை வட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள முதலுதவி மருத்துவ மையத்திற்கு கீழ்கண்ட பதவிகளில் இருந்து மருத்துவ பணியாளர்களை கொண்டு செயல்பட பணியாளர்கள் ஒப்பந்த ஊதியத்தில் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 12.11.2021  மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இதர விபரங்களை அலுவலகத்தில்‌ அலுவலக நாட்களில்‌ அலுவலக நேரத்தில்‌ நேரில்‌ கேட்டுத்‌ தெரிந்து கொள்ளலாம்‌ மற்றும்‌ திருக்கோயில்‌ இணையதளத்தில்‌ தெரிந்து கொள்ளலாம்‌. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே உள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம் TNHRCE
வேலையின் பெயர் Doctor, Nurse & Attender
காலிப்பணி இடங்கள் 06 காலிப்பணி இடங்கள்
தேர்ந்தெடுக்கும் முறை Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
வயது அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.11.2021
விண்ணப்ப முறை 12.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
முகவரி Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruttani, Tiruvallur-631209.
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பங்களுக்கு கட்டணம்‌ கிடையாது.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு கல்வி தகுதி

வேலையின் பெயர் கல்வி தகுதி
 Nurse  DGNM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
 Attender 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 Medical Officer  MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு சம்பள விவரம்

வேலையின் பெயர் சம்பள விவரம்
 Medical Officer  ரூ.75,000/-
 Nurse  ரூ.14,000/-
 Attender  ரூ.6,000/-

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://tiruttanigaimurugan.org/tiruttanimurugan/nodification/Employment%20Notice.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு நிபந்தனைகள்‌

 • இந்துமதத்தைச்‌ சார்ந்தவராகவும்‌ தமிழ்நாட்டை சார்ந்தவராகவும்‌ இருக்க வேண்டும்‌.
 • தொற்றுநோய்‌ உடல்‌ அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்‌.
 • நீதிமன்றத்தில்‌ தண்டனை அடைந்தவர்கள்‌ பட்டகடனை தீர்க்க முடியாதவர்கள்‌ என நீதிமன்றத்தில்‌ தீர்மானிக்கப்பட்டவர்கள்‌
 • அரசுப்பணிகள்‌, பொது ஸ்தாபனங்கள்‌ மற்றும்‌ வேறு இடங்களில்‌ பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம்‌ செய்யப்பட்டவர்கள்‌. ஆகியோர்கள்‌ மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத்‌ தகுதியற்றவர்கள்‌.
 • நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும்‌. இதற்கு அரசிதழ்‌ பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச்‌ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்‌.
 • இந்து சமயத்தைச்‌ சார்ந்த நபர்களிடமிருந்து 12.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தை கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
 • விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக அனுப்ப வேண்டும்.
 • விண்ணப்பங்கள் அனுப்பும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
 • வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு அறிவிப்பு அனுப்பப்படும்.
 • நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டவை
 • விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோகியம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
 • விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருத்தல் வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.
 • விண்ணப்பங்களுக்கு கட்டணம்‌ கிடையாது.
 • விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in/ என்கிற இணையதள முகவரியில்‌ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்‌ பெயரில்‌ உள்ள பக்கத்தில்‌ விண்ணப்பங்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.
 • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruttani, Tiruvallur-631209.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G

First published:
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous article`கிராமத்தின் தேவைகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்!’ – பஞ்சாயத்து தலைவரான 22 வயது ஸாருகலா
Next articleஇந்தியாவில் இந்த ஸ்கூட்டரை வாங்கிய முதல் ஆள் இவர்தான்… விலை எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here