இந்த ராசிக்காரர்கள் சூப்பரான தலைவர்களாக இருப்பார்கள்: உங்களுக்கும் இந்த ராசியா?


Leadership Quality: இந்திய வேதங்களில் 12 இராசி பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு ராசிக்காரர்களின் தன்மையும் குணங்களும் வெவ்வேறானவை. இதன் காரணமாக அந்தந்த ராசிக்காரர்கள் அவற்றுடன் தொடர்புடைய பலன்களைப் பெறுகிறார்கள்.

ஜோதிடத்தில் தலைமை குணம் அதிகம் உள்ள 4 ராசிக்காரர்கள் (Zodiac Signs) பற்றி கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர்கள் எங்கு சென்றாலும், எந்த நேரத்திலும் தங்கள் தலைமைத்துவ குணத்தால் மக்களை கவர்கிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணம் பிறவியிலேயே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

கடுமையான சூழலையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்பவர்கள்

கும்பம்  (Aquarius): இந்த ராசிக்காரர்களுக்கு சூழ்நிலைகளை உணரும் திறன் உள்ளது. அவர்கள் மற்றவர்களை விட, முன்னதாகவே அனைத்தையும் சிந்தித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கிறார்கள். சில சமயங்களில் அப்படிப்பட்டவர்களின் முடிவுகள் தவறாகிவிடும். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை சரியானதாகவே இருக்கின்றன.

கும்ப (Aquarius) ராசிக்காரர்கள் மிகவும் இயல்பானவர்கள். இவர்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்கும் முன், அதன் சாதக பாதகங்களைப் பற்றி தீவிரமாக யோசிப்பார்கள். இவர்களுடைய இந்த குணத்தால், மக்கள் இவர்கள் பக்கம் ஈர்க்கப்பட்டு, பல்வேறு விஷயங்களில் இவர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்புகிறார்கள்.

நேர்மையான இயல்புடையவர்கள்

விருச்சிகம் (Scorpio): இந்த ராசிக்காரர்கள் வேலையில் நேர்மையானவர்களாக இருந்தாலும், அதிக கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் தவறான செயல்களைச் செய்வதில்லை, அதைச் செய்ய அனுமதிப்பதுமில்லை. இதன் காரணமாக, மற்றவர்கள் இவர்களைப் பார்த்து பயப்படுவதுண்டு.

இவர்கள் தேவையில்லாமல் குழப்பமடைய மாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை செய்து முடித்த பின்னர்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். இவர்கள் சற்று பிடிவாத குணம் கொண்டவர்கள், ஆனால் இவர்கள் எடுக்கும் முடிவுக்காக அனைவரும் அவர்களை மதிக்கிறார்கள்.

ALSO READ:விருச்சிக ராசிக்குள் நுழையும் செவ்வாய்; ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு கவனம் தேவை..!! 

வலிமையான ஆளுமை கொண்டவர்கள்

மகரம் (Capricorn): இந்த ராசிக்காரர்களின் ஆளுமை ரோஜா மலரைப் போல இருக்கும். அவர்களின் ஆளுமை மற்றும் நல்ல டிரஸ்ஸிங் சென்ஸ் காரணமாக, இவர்கள் எளிதாக எங்கும் தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். மேஷ (Capricorn) ராசிக்காரர்கள் அதிக சிந்திக்கும் திறன் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்கள். அவர்களுக்கு ஐடியாக்களுக்கு பஞ்சமில்லை. மக்கள் அவர்களுக்கு எதிராக செல்வதைத் தவிர்த்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவே எண்ணுவார்கள்.

பிறப்பிலிருந்தே தலைமைப் பண்பு

மேஷம் (Aries): இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். இவர்கள் எந்த வேலையை செய்தாலும், அதை தங்கள் சொந்த வழியில் நன்றாக செய்து முடிப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் பிறப்பிலிருந்தே தலைமைப் பண்புகளைக் கொண்டுள்ளனர். இவர்களது ஆளுமையால் அனைவரும் ஈர்க்கப்படுகிறார்கள்.

இந்த ராசிக்காரர்கள் எங்காவது தங்கள் கருத்தைப் பேசத் தொடங்கினால், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்க அனைவரும் விரும்புவார்கள்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ:இந்த ராசிக்காரர்கள் கோவத்தை வென்று கூலாக இருப்பார்கள்: இதில் நீங்களும் உண்டா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Culture NewsSource
Previous articleகல்வி சான்றிதழ்களுக்கு 18% ஜிஎஸ்டி: யார் யாருக்கு பொருந்தும்? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
Next articleபிரம்மாண்ட வெற்றி பெற்ற மெகா சீரியல்களின் மகாசங்கமம்… ரேட்டிங் எவ்வளவு தெரியுமா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here