உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா.. இதுவரை 239,903,096 பேர் பாதிப்பு.. 4,888,647 பேர் பலி

Google Oneindia Tamil News


Delhi

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

டெல்லி: நாளுக்கு நாள் மிரட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.88 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,888,647 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 17,776,743 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பேரழிவை உருவாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமே இந்த கொரோனாவால் முடங்கி போயுள்ளது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

Coronavirus positive case crosses 239,903,096 and death case 4,888,647

உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.88 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,888,647 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 23,99,30,096 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 217,237,706 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 17,766,818 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 33 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்படி, கொரோனா நோய்த்தொற்றில் அமெரிக்காவுக்கு அடுத்தபடி உலகளவில் 2வது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது.

அமெரிக்காவில் ஒரு நாளில் 97,889 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன.. ஒரேநாளில் 1801 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 35,098,008 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 45,544,900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 20ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. இதே நிலை பண்டிகை காலத்திலும் தொடருமா?தமிழகத்தில் 20ஆவது நாளாக தொடர்ந்து குறையும் கொரோனா.. இதே நிலை பண்டிகை காலத்திலும் தொடருமா?

இந்தியாவில் இதுவரை 34,019,680 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.. நேற்று ஒரே நாளில் 19,180 கோரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன… 451,469 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.. இதுவரை மட்டும் 34,019,680 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸில் உள்ளது.. 21,597,949 பேர் இதுவரை அங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.. நேற்று ஒரே நாளில் 7,852 பேருக்கு தொற்று உறுதியாக உள்ளது.. 201 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர்..

பிரேஸிலில் தொற்று எண்ணிக்கை 21,597,949 ஆக உயர்ந்துள்ளது.. இதுவரை அங்கு 601,643 பேர் உயிரிழந்துள்ளனர்.. நேற்று மட்டும் 201 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 7,861,681 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல நாடுகள் 2 டோஸ்களையும் போட்டுவிட்டு, 3வது டோஸ்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், இந்தியாவிலும் 2வது டோஸ்களை செலுத்தும் பணி தீவிரமாகி கொண்டிருக்கிறது.. ஆரம்பத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை செலுத்தி கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர்.. எனவே, அந்தந்த நாடுகள் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டன.. மேலும், தடுப்புசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு பரிசுகளையும் சில நாடுகள் அறிவித்து வருகின்றன.

English summary

Coronavirus positive case crosses 239,903,096 and death case 4,888,647 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48.88 லட்சத்தை தாண்டியது.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More – Oneindia TamilSource
Previous articleகுலசேகரபட்டினம் தசரா திருவிழா: கஜலெட்சுமி திருக்கோலத்தில் காட்சியளித்த அம்பாள்
Next articleலக்கிம்பூர் வன்முறை : இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை கோரும் காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here