உலகம்: 25 கோடியே 96 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

உலகம்: 25 கோடியே 96 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு


தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 1,96,77,583 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.
 
image
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,96,81,074 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கொரோனா பாதிப்புக்கு 51,91,312 பேர் உயிரிழந்துள்ளனர். 23,48,12,179 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,96,77,583 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
 
இதையும் படியுங்கள்: “3ஆவது டோஸ் தடுப்பூசி தற்போதைக்கு தேவையில்லை” – ரன்தீப் குலேரியா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu NewsSource
Previous articleயமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் – எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!
Next articleநல்லதே நடக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here