ஒரே நாளில் $1,000 வீழ்ந்த பிட்காயின் மதிப்பு; இதுவரை எந்தெந்த நாடுகளில் கிரிப்டோகரன்சிக்குத் தடை?

ஒரே நாளில் $1,000 வீழ்ந்த பிட்காயின் மதிப்பு; இதுவரை எந்தெந்த நாடுகளில் கிரிப்டோகரன்சிக்குத் தடை?


இந்திய அரசு, தனியார் கிரிப்டோ கரன்சி முதலீட்டைத் தடை செய்யப்போவதாகவும், இதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை வருகிற குளிர்காலக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப் போவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று, கிரிப்டோகரன்சிகள் இந்தியாவில் தடை செய்யப்பட மாட்டாது என்றும், அதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்த விஷயங்கள் விரைவில் அரசால் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும், குறிப்பிட்ட சில கிரிப்டோகரன்சிகளுக்கு மட்டும் தடை இருக்காது என்றும், அவற்றை செயல்படுத்த அரசு அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

பிட்காயின்

Also Read: கிரிப்டோகரன்ஸி முதலீடு: பணத்தை இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? வழிகாட்டும் ஆன்லைன் நிகழ்ச்சி

கடந்த வாரம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கிரிப்டோகரன்சி முதலீடு குறித்து முதல் முறையாகப் பேசியபோது, “இளைஞர்களைச் சீரழிக்கும் முதலீடாக கிரிப்டோகரன்சி முதலீடு மாறிவிடக் கூடாது. இளைஞர்களைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்லும் தீயவர்களின் கையில் கிரிப்டோகரன்சி போய்விடக் கூடாது. இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். அதே போல, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸூம், தனியார் கிரிப்டோகரன்சிகளால் ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், `2021 கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டம்’ மூலம் இந்தியாவின் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயம் உருவாக்கப்பட இருப்பதாகவும், அதை ரிசர்வ் வங்கியின் சொந்த டிஜிட்டல் கரன்சியாக வெளியிடுவதற்கு மத்திய அரசு திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீன அரசு கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு முற்றிலுமாகத் தடை விதித்திருக்கிறது. அதே போல, ரஷ்யா, மொராக்கோ, எகிப்து உள்ளிட்ட ஒரு சில நாடுகளும் கிரிப்டோகரன்சியை முற்றிலுமாகத் தடை செய்திருக்கின்றன. இந்நிலையில், இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீடுகள் தடையா அல்லது அனுமதியா அல்லது ரிசர்வ் வங்கியின் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்கள் மாறி மாறி வந்துகொண்டே இருப்பது, கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பிட்காயின்

இதன் காரணமாகப் பல கிரிப்டோகரன்சிகளின் விலை பெருமளவு சரிந்துள்ளது. குறிப்பாக, அதிக மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனுடன் வர்த்தகமாகிக்கொண்டிருக்கும் பிட்காயின் விலை இம்மாத தொடக்கத்தில் 69,000 டாலராக இருந்தது. அது தற்போது 56,920 டாலராகச் சரிந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 1,000 டாலருக்கு மேல் சரிந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அதிக விலை ஏற்றத்தைச் சந்தித்து வந்த `ஷிபா இனு’ என்கிற கிரிப்டோகரன்சி இன்று ஒரே நாளில் மட்டும் 8% வரை விலை குறைந்து 0.000039 டாலருக்கு வர்த்தகமாகிறது. அதே போல கார்டனோ, லிஸ்க், அவே, ட்ரான், ஆர்சிட் உள்ளிட்ட பல்வேறு காயின்களின் விலை வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

`தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ… எது சொன்னாலும் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க’ என்பதுதான் இந்திய கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களின் தற்போதைய மனநிலை.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: விகடன்Source
Previous articleViral Video: 19வது மாடி பால்கனியில் இருந்து விழும் 82 வயது பாட்டி! வீடியோ வைரல்
Next articleகுறைக்கடத்தி பற்றாக்குறையில் இருந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பும் மாருதி சுஸுகி!! விற்பனை அதிகரிக்குமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here