கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட திரைப்பட ரிலீஸ்: வன்முறையில் ஈடுபட்ட சுதீப் ரசிகர்கள்

கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட திரைப்பட ரிலீஸ்: வன்முறையில் ஈடுபட்ட சுதீப் ரசிகர்கள்


கர்நாடகாவில் பிரபல நடிகரின் திரைப்பட வெளியீடு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதால், அவரது ரசிகர்கள் திரையரங்குகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.

தமிழில் நான் ஈ, புலி உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக நடித்த ‘சுதீப்’ கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். இவரது நடிப்பில் இன்று வெளியாக இருந்த கோடிகொப்பா – 3 திரைப்படம் கடைசி நேரத்தில் வெளியாகவில்லை. நாளை வெள்ளியன்று வெளியாகும் என திரைப்படக் குழுவினர் அறிவித்தனர். அதனால் படத்தைப் பார்க்க திரையரங்குகளில் ஆவலுடன் திரண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விஜயபுரா உள்ளிட்ட நகரங்களில் திரையரங்குகள் மீது கற்களை வீசித் தாக்கினர். திரையரங்க சொத்துக்களை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

கிராமத்தான குணமாத்தானே பாத்துருக்க.. கோவப்பட்டு பாத்ததில்லையே – மிரட்டும் அண்ணாத்த டீசர் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Puthiyathalaimurai – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu NewsSource
Previous articleஉலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடம்
Next articleதமிழகத்தில் இன்று 1,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி; சென்னையில் 163 பேர் பாதிப்பு: 1,438 பேர் குணமடைந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here