கும்ப ராசியில் பயணிக்கும் குருபகவானால் குரு பலம் யாருக்கு – கல்யாண யோகம் கை கூடுமா?


Astrology

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: திருமணத்திற்கு ஜாதகத்தை எடுத்துக்கொண்டு போய் ஜோதிடர்களைப் பார்த்தாலே முதலில் குரு பலன் வந்து விட்டதா என்றுதான் பார்ப்பார்கள். குருவின் பார்வை, குரு பயணிக்கும் இடத்தை வைத்து குரு பலம் வந்து விட்டதா என்று கூறலாம். குரு பலம் வந்தால் மட்டுமே திருமண யோகம் கை கூடி வரும். புத்திர பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலை, புரமோசன் என நிறைய சுப காரியங்கள் நடைபெறும்.

குரு பகவான் கால புருஷத்தத்துவப்படி தற்போது 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஒருவரின் ராசிக்கு 2, 5, 7, 9, 11ஆம் இடத்தில் கோட்சார குரு வரும் போது, குரு பலன் என கூறுகிறோம். கும்ப ராசியில் உள்ள குரு தனது ஐந்தாம் பார்வையால் மிதுன ராசியையும், ஏழாம் பார்வையால் சிம்ம ராசியையும், ஒன்பதாம் பார்வையால் துலாம் ராசியையும் பார்வையிருகிறார். இந்த பார்வையால் மிதுனம், சிம்மம், துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பலன் வந்து விட்டது.

அதோடு மேஷ ராசிக்கு ஏழாம் வீடு, தனுசு ராசிக்கு ஏழாம் வீடு, கும்ப ராசிக்கு ஏழாம் வீட்டின் மீதும் பார்வை கிடைப்பதால் குரு பலன் வந்துள்ளது. அதோடு குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீது விழும் ராசிகளான ரிஷபம், கன்னி, கடகம் ராசிக்காரர்களுக்கும் குரு பலன் வந்துள்ளது.

குருபலனால் நன்மைகள்

குருபலனால் நன்மைகள்

ஒருவரின் ஜாதகத்தில் குரு பலமாக இருந்தால் அவருக்கு சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கோச்சார ரீதியாக குரு பகவான், ராசியில் இருந்து 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது குரு பலம் வாய்ந்தவராக இருப்பார். குருவின் பார்வை கோடி புண்ணியம் தரும். தோஷங்களை நீக்கும்.

சுபகாரியம் கைகூடும்

சுபகாரியம் கைகூடும்

குரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். குரு ஒருவரின் ராசியில் 12 வருடத்திற்கு ஒருமுறை வந்து அமர்கிறார்.

களத்திர ஸ்தானத்தின் மீது குரு பார்வை

களத்திர ஸ்தானத்தின் மீது குரு பார்வை

குருவின் பார்வை களஸ்திர ஸ்தானத்தில் வரும்போது திருமண வயதில் உள்ளவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் நிச்சயம் திருமணம் கைகூடிவரும். அதுபோல குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானத்தில் இருந்தால். அந்த ஜாதகருக்கு அந்த குருபெயர்ச்சி காலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு குரு பலம் வந்துள்ளதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. மகர ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டில் குரு பயணம் செய்வதால் மகர ராசிக்காரர்களுக்கு திருமணம், புத்திரபாக்கியம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடைபெறும்.

ராஜயோகம் தரும் குரு திசை

ராஜயோகம் தரும் குரு திசை

குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், அவருக்கு ராஜயோகம் தேடி வரும். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை அமையும். பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும். புத்திரர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

தோஷம் நீங்க பரிகாரம்

தோஷம் நீங்க பரிகாரம்

ஒரு ஜாதகத்தில் குருவின் அருள் முழுமையாக இல்லாவிட்டால் திருமணம் கால தாமதமாகலாம். அல்லது திருமண வாழ்வில் நிம்மதியின்மையோ, குழந்தை பாக்கியம் கிடைக்காமலோ இருக்கலாம். இந்த குறையை சில பரிகாரங்களின் மூலமாகவும் முழுவதும் நிவர்த்தி செய்யலாம். குரு தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெறும் குரு தோஷ நிவர்த்தி யாகங்களில் பங்கேற்கலாம்.

English summary

If you take the horoscope for marriage and look at the astrologers, they will first see if the Guru has come to power. The vision of the Guru can tell whether the strength of the Guru has come by keeping the place where the Guru travels. Marriage yoga will come together only if the Guru is strong. Get the Buddha Blessing. Good work, a lot of auspicious things will happen as a promotion.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil AstrologySource
Previous articleபுத்தாண்டு ராசிபலன் 2022: தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிவு… மீன ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்
Next articleகொச்சி கப்பல் கட்டும் தள நிறுவனத்தில் வேலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here