“கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர் | News7 Tamil

“கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர் | News7 Tamil


அனைத்து நாட்களிலும் கோயில்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் எனும் அறிவிப்பை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மண்ணடியில் உள்ள ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோயிலில் இந்து சமைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

முதலமைச்சர் வழிகாட்டுதல்படி இன்று முதல் அனைத்து நாட்களிலும் கோயில்களில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். அதே வேளையில், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்வேறு தரப்பில் கோரிக்கைகளை பெற்றதையொட்டியே எல்லா நாட்களிலும் கோயில்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி தேவையான முகக்கவசம், கிருமி நாசினி, சமூக இடைவெளி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும். அதே நேரம், அர்ச்சனை, பூ, மாலை பழம் வைத்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதி கிடையாது.

அத்துடன் பணியாற்றும் அர்ச்சகர்கள், மற்றும் பக்தர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். விசேஷ நாட்களில் கொரோனா பரவாத அளவிற்கு நடவடிக்கை எடுக்க அனைத்து திருக்கோவிலுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும், “அனைத்து நாட்களிலும் கோயில்களை வழிபாட்டிற்கு திறப்பதாக வெளியிடப்பட்ட முடிவை எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்க முடியாது.

மக்களின் கோரிக்கைகளை, பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றே முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் எராளமான பொதுமக்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Advertisement:
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News7 TamilSource
Previous articleஅதானி குழுமம் வசம் திருவனந்தபுரம் விமான நிலையம்: நிர்வாகத்தைக் கையில் எடுத்தது
Next articleதமிழகத்தின் புதுமைப்பெண்… நயன்தாரா இவ்வளவு அழகா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here