சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்   

sabarimalai_2020093002_(1)


sabarimalai_2020093002_(1)

சபரிமலை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. 16ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து நடை அடைக்கப்படும்.  2022ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடக்கும். 

சபரிமலையின் www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம்.  சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர். பரிசோதனையின் கரோனா ‘நெகட்டிவ்’ சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலங்களில் பம்பையில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் சன்னிதானம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தங்கி செல்ல அனுமதி இல்லை. 

ஐயப்ப பக்தர்கள் வரும் வாகனங்கள் நிலக்கல் வரையே அனுமதிக்கப்படும். அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும். அபிஷேகம் செய்த நெய் அனைத்து பக்தர்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinamani – தமிழ்நாடு – https://www.dinamani.com/tamilnadu/Source
Previous articleராஜீவ்காந்தி பேரை சொல்லி கொண்டாடுவோம்… தி.மு.கவை விமர்சித்து ராமதாஸ் திடீர் பதிவு
Next articleஒரே வீட்டில் 20க்கும் மேற்பட்ட பூனை, நாய்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here