சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது ? எப்படி வழிப்பட வேண்டும் ?

Home


ஒன்பது நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாட்டப்படும் நவராத்திரியின் கடைசி மூன்று நாட்கள் துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று குழந்தைகளை முதன் முதலில் பள்ளிகளில் சேர்ப்பார்கள். அன்று பள்ளிகளில் சேர்ப்பதால், குழந்தைகள் நன்றாக படித்து நல்ல நிலைமையில் இருப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை.

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 28 ஆம் தேதி அக்டோபர் 14 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை கொண்டாட நல்ல நேரம் காலை 9 மணி முதல் 10.30 மணிவரை பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை மாலை 04.30 மணிவரை 6.50 மணிவரை பூஜை செய்யலாம்.

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை:

வீடு வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்து திருநீறில் பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

பின்பு வீட்டின் வாயலிலில் அருகில் மாமரம் இருந்தால் அதிலிருந்து மாவிலை பறித்து தோரணம் கட்ட வேண்டும். தற்போது பெரும்பாலானோர் மாவிலை கிடைக்காததால் பிளாஸ்டிக் மாவிலையை கடையில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு வினை தீர்க்கும் விநாயகரை வழிபட வேண்டும்.

மேலும் பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபட்ட பின்பு தான் கல்வி கற்பதில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழியை கேட்டிருப்பீர்கள். அந்த தொழிலை வணங்க வேண்டிய தினம் தான் இன்று. ஆம்.பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் வைத்து பொட்டுவைத்து அலங்கரிக்கவும்.மேலும் வீட்டு உபயோக்கருவிகளாகிய அரிவாள்மனை, சுத்தி, அரிவாள் போன்றவற்றிலும் பொட்டு வைத்து அலங்கரிக்கவும்.தொழில் செய்பவர்கள் உங்கள் தொழிலுக்குரிய இயந்திரங்களுக்கு பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும்.

also read: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடும் போது இதை மறக்க வேண்டாம்

நீங்க எந்த தொழில் செய்பவராக இருந்தால் அதற்கு உதவும் கருவி அல்லது பொருளை சுத்தம் செய்து சந்தனப் பொட்டு, குங்கும பொட்டு வைத்து பூ வைத்து வணங்க வேண்டும்.

பஸ், லாரி, ஆட்டோ ஓட்டுபவர்கள் உங்கள் வாகனத்தில் சந்தனத்தை கரைத்து வாகனம் முழுவதும் தெழித்துவிடலாம்.

பின்பு நெய்வேத்தியம் செய்வதற்காக வாழை இலையில் பொரி கடலை, அவல், வடை பாயாசம் மற்றும் பல வகையான பழங்களை வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும். எங்கெல்லாம் பூஜை செய்தீர்களோ மணியடித்து நீரினால் மூன்றுமுறைச்சுற்றி நிவேதனம் செய்து விட்டு புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கும் நிவேதனம் செய்யவும்.பிறகு சூடம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபடவும். விபூதி, குங்குமம் மற்று பொரிக்கடலை ஆகியவற்றை எல்லாருக்கும் கொடுத்து பூஜையை நிறைவு செய்யவும்..

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous articleAnnatha teaser released in action …!
Next articleSuper Star rajinikanth siruthai siva in Annathe Teaser – தமிழ் News – IndiaGlitz.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here