தமிழகத்தின் புதுமைப்பெண்… நயன்தாரா இவ்வளவு அழகா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்

தமிழகத்தின் புதுமைப்பெண்... நயன்தாரா இவ்வளவு அழகா...ஜொள்ளு விடும் ரசிகர்கள்


விக்னேஷ் சிவனுடன் காதல்

டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கோலிவுட்டில் அனைவரையும் கவர்ந்த நட்சத்திர காதல் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தான். இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினர்.

தயாரிப்பில் கலக்கல்

தயாரிப்பில் கலக்கல்

இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வெற்றி பெற்று வருகிறார்கள். இவர்கள் தயாரித்த கூழாங்கல் படம் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு, பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. தற்போதும் அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறார்கள்.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

மலையாளம், தமிழ் மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா, பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார். தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தை நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

 நிச்சயதார்த்த வீடியோ

நிச்சயதார்த்த வீடியோ

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாராவிடம் கையில் இருக்கும் மோதிரம் பற்றி கேட்டதற்கு இது தங்களின் நிச்சயதார்த்த மோதிரம் என்றார். ஏற்கனவே எப்போதும் திருமணம் என கேட்டு வந்த ரசிகர்கள், இதற்கு பிறகு அதிகம் கேட்க துவங்கி விட்டனர். விரைவில் இவர்களின் திருமண அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 வைரலான ஃபோட்டோ

வைரலான ஃபோட்டோ

பொதுவாகவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஃபோட்டோ, வீடியோக்கள் அனைத்தையும் ரசிகர்கள் வைரலாக்குவார்கள். அது போல் சமீபத்தில் தான் நடித்த தனிஷ்க் நகைக்கடை விளம்பரத்திற்கான ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்களை வெளியிட்டு அசத்தினார் நயன்தாரா. இந்நிலையில் இந்த விளம்பரத்தின் வீடியோ இன்று வெளியாகி உள்ளது.

விளம்பர வீடியோ

விளம்பர வீடியோ

இதில், வலிமை, அன்பு, அழகு, அறிவு இவை எல்லாம் நாமே. தமிழகத்தின் புதுமைப்பெண் நாமே. பாரம்பரியம் ஒரு பக்கம். புதுமை மறுபக்கம். பிறருக்காகவும் வாழ்வோம். கொஞ்சம் தனக்காகவும் வாழ்வோம். சிரிக்க வைக்கும் தோழியும் நாமே. சிந்திக்க வைக்கும் பெண்மணியும் நாமே. கலைகளோ, காயங்களோ நாம் பெருமையாக அணிவோம். சில நேரம் அன்பான தாய். சில நேரம் ஆர்வம் உள்ள குழந்தை. கூரைகளும் நாமே. மாற்றங்களும் நாமே. இது தான் நம் அடையாளம். இந்த மண்ணில் புதுமை பெண்களின் அடையாளம். தமிழகத்தை பெருமையுடன் ஜொலிக்க வைக்கும் புதுமைப் பெண்களுக்காக தனிஷ்க் என்ற வசனத்துடன் விளம்பரம் அமைந்துள்ளது.

ஜொள்ளு விடும் ரசிகர்கள்

ஜொள்ளு விடும் ரசிகர்கள்

நயன்தாரா பேசும் இந்த வசனம், செம அழகான லுக்கில் அவர் வருவது என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் செம வைரலாக்கி வருகிறார்கள். நயன்தாராவின் அழகை நெட்டிசன்கள் விழுந்து விழுந்து பாராட்டி வருகிறார்கள்.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips – FilmiBeat TamilSource
Previous article“கோயில்கள் திறப்பு எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்த வெற்றியல்ல”- அமைச்சர் | News7 Tamil
Next articleதமிழகத்தில் நவம்பர் 1 முதல் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை தொடங்க அனுமதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here