தமிழகத்தில் இன்று 1,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி; சென்னையில் 163 பேர் பாதிப்பு: 1,438 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று 1,259 பேருக்கு கரோனா தொற்று உறுதி; சென்னையில் 163 பேர் பாதிப்பு: 1,438 பேர் குணமடைந்தனர்


தமிழகத்தில் இன்று 1,259 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,83,396.

சென்னையில் 163 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,52,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 26,32,092.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று இல்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 58,88,396 பேர் வந்துள்ளனர்.

சென்னையில் 163 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 37 மாவட்டங்களில் 1,096 பேருக்குத் தொற்று உள்ளது.

* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 235 தனியார் ஆய்வகங்கள் என 304 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (அக். 14) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 15,451.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 4,90,17,492.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,37,423.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 26,83,396.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,259.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 163.

* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 1,825.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 15,66,175 பேர். பெண்கள் 11,17,183 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.

* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 719 பேர். பெண்கள் 540 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,438 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 26,32,092 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 20 பேர் உயிரிழந்தனர். 8 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 12 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இந்நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 35,853 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8,517 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 18 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர்கள் இருவர்.

இன்று மாநிலம் முழுவதும் 41,250 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 25,888 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 8,252 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்Source
Previous articleகடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட திரைப்பட ரிலீஸ்: வன்முறையில் ஈடுபட்ட சுதீப் ரசிகர்கள்
Next articleஎம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய மிட் சைஸ் எஸ்யுவி வகை கார் அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here