தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. 24 மாவட்டங்களில் 10க்கும் கீழ் வைரஸ் பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. 24 மாவட்டங்களில் 10க்கும் கீழ் வைரஸ் பாதிப்பு


Chennai

oi-Vigneshkumar

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 24 மாவட்டங்களில் 10க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் நவ. 30ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து குறைந்தே வருகிறது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பிசர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

பண்டிகை காலத்தில் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்பட்டது. இருப்பினும், சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட வேக்சின் பணிகளால் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் உள்ளது.

தினசரி கொரோனா பாதிப்பு

தினசரி கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மொத்தம் 744 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 27,22,506 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் 0.7%ஆகக் குறைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்திலும் பாசிட்டிவ் விகிதம் 1.4%ஐ தாண்டவில்லை. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 0.9%ஆகவும் கோவையில் 1.3% ஆகவும் உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்

கொரோனா உயிரிழப்புகள்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகத் தலைநகர் சென்னை, மயிலாடுதுறை, சேலம் மாவட்டங்களில் தல 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,415 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்

ஆக்டிவ் கேஸ்கள்

அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 8,536ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 8,484ஆகக் குறைந்துள்ளது மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 782 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,77,607 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட வாரியாக பாதிப்பு

மாவட்ட ரீதியான பாதிப்பில் சென்னையில் 115 பேருக்கும் கோவையில் 117 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் உள்ள 24 மாவட்டங்களில் தினசரி வைரஸ் பாதிப்பு 10க்கு கீழ் குறைந்துள்ளது. தேனியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

English summary

Tamilnadu Corona cases latest updates in Tamil. 24 districts record less than 10 cases

Story first published: Wednesday, November 24, 2021, 23:32 [IST]
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More – Oneindia TamilSource
Previous articleரூ.250 கோடி முதலீட்டில் தமிழகத்தில் நுழையும் மும்பை இவி சார்ஜிங் க்ரூப்- முதல்வர் முன்னிலையில் புதிய ஒப்பந்தம்
Next articleஜெர்மனியில் ஒரே நாளில் 66,884 பேருக்கு தொற்று உறுதி : மீண்டும் முழு ஊரடங்கு அமலாகுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here