தமிழகத்தில் நவம்பர் 1 முதல் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளை தொடங்க அனுமதி

Home


தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலக் கட்டுப்படுத்தும் வகையில் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்துவருகிறது. எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கேற்க அனுமதி

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது.

மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள்(LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாகக் செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous articleதமிழகத்தின் புதுமைப்பெண்… நயன்தாரா இவ்வளவு அழகா…ஜொள்ளு விடும் ரசிகர்கள்
Next articleஉலக பட்டினி ஆய்வறிக்கை வெளியானது; மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியாவுக்கு 101வது இடம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here