நான்கு புதிய 350 சிசி பைக்குகள் அறிமுகம் – ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவிப்பு


ராயல் என்ஃபீல்டு புல்லட்களுக்கு பல ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பிரத்யேகமான ரசிகர் கூட்டம் இருந்து வந்துள்ளன. தற்போது இளைஞர்கள் விரும்பும் வகையில் டெக்னாலஜி அம்சங்களோடு பல புதிய மாடலில் பைக்குகளை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட RE கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 என்ற இரு மாடல்களுமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. அதையொட்டி, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது நான்கு புதிய 350 சிசி பைக்குகளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. நான்கு பைக்குகளுக்குமே குறியீட்டு பெயர் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பைக்குகள் அனைத்துமே நிறுவனத்தின் J பிளாட்ஃபார்மில் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய புல்லட் மாடல்களான புல்லட் 350 மற்றும் புல்லட் 350 ES ஆகிய இரண்டு பைக்குகளின் மாற்றாக புதிய புல்லட் 350 அறிமுகமாகப் போகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் தற்போது J1B என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

அதே போல, கிளாசிக் 350 பைக்கின் அடிப்படையில், பாபர் ஸ்டைல் பைக் அடுத்த அறிமுகமாக இருக்கலாம் என்றும் ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இந்த மாடலுக்கு தற்போது J1H என்று குறியீடு வழங்கப்பட்டுள்ளது. J1H ஒற்றை இருக்கை பைக்காக, பாபர் ஸ்டைலில் உயரமான ஹேண்டில் பார் மற்றும் வெள்ளை நிற வால்கள் கொண்ட டயர்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் மிரட்டக் கூடிய J1H, இந்தியாவில் உற்பத்தியாகும் பாபர் ஸ்டைல் பைக்குகளில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். மேலும், இது நான்கு பைக்குகள் திட்டத்தில், கடைசியாக அறிமுகமாகலாம்.

அடுத்ததாக இரண்டு அர்பன் மோட்டர்சைக்கிள்களை ராயல் என்ஃபீல்டு வடிவமைக்க உள்ளது. அதன் குறியீட்டுப் பெயர்கள், J1C1 மற்றும் J1C2. இந்த இரண்டு மாடல்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள், தோற்றம், ஸ்டைல், ஆகியவை கொண்டிருக்கும். அதே நேரத்தில் சிறிய மாறுபாடுகள் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இவற்றில் ஒரு மாடல் ஹண்டர் என்று இணையத்தில் அழைக்கப்படுகிறது.

Also read… Spirit of Innovation – உலகின் அதி வேகமான எலக்ட்ரிக் ஏர்பிளேனின் புதிய சாதனை!

J1C1 RE இன் எளிமையான தோற்றம் கொண்ட ப்ரீமியம் மாடலாக அறிமுகமாகும் என்றும், J1C2, குறைந்த விலையில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நான்கு பைக்குகளையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நான்கு வாகனங்களின் உற்பத்தியை நிறைவேற்றி, சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பல்வேறு பைக்குகள் அறிமுகப்படுத்தி வரும் நிலையில், பாரம்பரியமான ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் மாறிவரும் தேவைக்கு ஏற்றவாறு அதிகபட்ச பெர்ஃபார்மன்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் பல்வேறு மாடல்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous articleஇந்த ராசிக்காரர்கள் கோவத்தை வென்று கூலாக இருப்பார்கள்: இதில் நீங்களும் உண்டா?
Next articleபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி; வார நட்சத்திர பலன்கள்; நவம்பர் 28ம் தேதி வரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here