பிரம்மாண்ட வெற்றி பெற்ற மெகா சீரியல்களின் மகாசங்கமம்… ரேட்டிங் எவ்வளவு தெரியுமா ?


இரு சீரியல்களின் மகாசங்கமம்

எவ்வளவு மகாசங்கமங்கள் நடத்தப்பட்டாலும், சமீபத்தில் ஒளிபரப்பப்படும் மகாசங்கமங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக விஜய் டிவி.,யின் டாப் ரேட்டிங் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல்களை ஒன்றாக மகாசங்கமம் ஒளிபரப்பப்பட்டது.

சென்னை வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

சென்னை வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னையை சுற்றி பார்க்க வருவதாகவும், தமிழும் சரஸ்வதி சீரியலில் தமிழ் வீட்டு முன் சரியாக வண்டி பிரேக்டவுன் ஆவதாகவும் காட்டப்படுகிறது. அப்போது தமிழை ஒருவர் கத்தியால் குத்த வருகிறார். அவரிடம் இருந்து மூர்த்தி, தமிழை காப்பாற்றுகிறார். டிரைவர் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றதால், எதிர்பாராத விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், தமிழ் வீட்டில் தங்குகிறார்கள்.

பாக்யலட்சுமியும் இணைந்தார்

பாக்யலட்சுமியும் இணைந்தார்

ஜாலியாக, கலகலப்பாக இந்த மகாசங்கமம் சென்றது. இதன் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுவதற்காக மகாசங்கமம் நிறைவடையும் நாளில், பாக்யலட்சுமி சீரியலையும் இணைத்து ஒளிபரப்பினர். அதாவது தமிழும் சரஸ்வதி சீரியல் கோதைக்கு வரும் பிரச்சனைகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தீர்த்து வைக்கிறது. விருந்திற்கு சமைக்க ஆள் வராததால் கோதை தவிக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் உதவியால் பாக்யலட்சுமி சமையல் செய்வதற்காக அங்கு வருகிறார்.

ரேட்டிங் எவ்வளவு தெரியுமா

ரேட்டிங் எவ்வளவு தெரியுமா

பாக்யலட்சுமி கிளம்பியதும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அங்கிருந்து கிளம்புகிறது. இதோடு மகாசங்கமம் நிறைவடைகிறது. ஆனால் இந்த மகா சங்கமம் ரசிகர்களின் மனம் கவர்ந்ததாக மாறி உள்ளது. இதனால் இரண்டு சீரியல்களின் டிவி ரேட்டிங் வெகுவாக அதிகரித்துள்ளது. நகர் புறத்தில் மட்டும் இந்த மகாசங்கமம் 9.5 ரேட்டிங்கை பெற்றுள்ளதாம்.

கண்ணன் எடுக்கும் முயற்சி

கண்ணன் எடுக்கும் முயற்சி

இந்த மகாசங்கமத்திற்கு இடையிலும் பாண்டியன் ஸ்டோர்ஸிற்கு பிரச்சனை வருவதாகவும், அதை தீர்க்க கண்ணன் என்ன செய்கிறார் என்பதையும் காட்டுகிறார்கள். வாடக்கையாளர்களை மீண்டும் கவருவதற்காக சிறப்பு பரிசாக மொபைல் போன் வழங்குவதாக அறிவிக்க கண்ணன் முடிவு செய்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதனை எதிர்க்கிறார்.

கண்ணனை ஏற்பாரா மூர்த்தி

கண்ணனை ஏற்பாரா மூர்த்தி

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து என்ன நடக்கும். கண்ணனின் முயற்சி வெற்றி பெற்று, மீண்டும் குடும்பத்துடன் சேர்வாரா அல்லது கண்ணனின் முயற்சி சொதப்பல் ஆகி மூர்த்தியின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் கண்ணன் ஆளாக போகிறாரா என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips – FilmiBeat TamilSource
Previous articleஇந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!
Next articleவெள்ளி இ.டி.எப்., திட்டம் ‘செபி’ விதிமுறைகள் வெளியீடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here