புத்தாண்டு ராசிபலன் 2022: குரு,சனி, ராகு கேது இடப்பெயர்ச்சிகளால் யாருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்


Astrology

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு பிறக்க இன்னும் ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. உலகமே கொரோனாவின் பிடியில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பல நாடுகளில் கொரோனாவின் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. 2021 ஆண்டில் இரண்டாவது அலையில் பல லட்சம் உயிர்கள் பறிபோனது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்களும் மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. பிறக்கப்போகும் 2022ஆம் புத்தாண்டிலாவது மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா? நவ கிரகங்களின் சஞ்சாரம் மேஷம் முதல் கடகம் வரை வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார். ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார். பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும் சனிபகவான் மகர ராசியில் ஆறு மாத காலம் பயணிக்கிறார். பின்னர் நேர் கதியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் இடப்பெயர்ச்சியாகிறார். 2025ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில்தான் பயணம் செய்வார்.

புத்தாண்டு ராசிபலன் 2022: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்புத்தாண்டு ராசிபலன் 2022: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்

ராகு பகவான் 12.04.22 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு ராசியிலிருந்து மேஷம் ராசிக்குக பெயர்ச்சி அடைகிறார். அதே சமயம் கேது பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். 2022ஆம் ஆண்டில் ஜூலை 29ஆம் தேதி மீண்டும் கும்ப ராசிக்கு வக்ரகதியில் திரும்புகிறார். நவம்பர் 24ஆம் தேதியன்று மீண்டும் கும்ப ராசியில் இருந்து நேர்கதியில் மீன ராசிக்கு செல்கிறார் குரு பகவான்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 10 மற்றும் 11ஆம் வீடுகளில் பயணம் செய்கிறார். செய்யும் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் முடிவுக்கு வரும். இரண்டாம் வீட்டில் உள்ள ராகு ஜென்ம ராசிக்கு இடம்மாறுவதால் வேலையில் பண முதலீட்டில் கவனம் தேவை. எட்டாம் வீட்டில் உள்ள கேது ஏழாம் வீட்டிற்கு மாறுவதால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையை சில நேரங்களில் சண்டை சச்சரவுகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. குருவின் பயணம் லாப ஸ்தானத்திலும் விரைய ஸ்தானத்திலும் இருப்பதால் அதிக வருமானம் வரும் கூடவே சுப செலவுகளும் அதிகரிக்கும். களத்திர ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமண சுப காரிய முயற்சிகள் கை கூடி வரும். சனிபகவானின் பார்வை இடம் மாறுவதால் 2022ஆம் ஆண்டு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

2022ஆம் ஆண்டு சுக்கிரபகவான் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. ஜென்ம ராசியில் இருந்த ராகு விரைய ராசிக்கும், கேது ஆறாம் வீட்டிற்கும் செல்வதால் உங்களுக்கு இருந்த மனக்குழப்பங்கள் வரும் புத்தாண்டு முதல் முடிவுக்கு வரும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள சனிபகவான் பத்தாம் வீட்டிற்கு வருவதால் வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குரு பகவானின் பயணம் உங்கள் ராசிக்கு பத்தாவது வீடு மற்றும் லாப வீட்டிற்கும் மாறி மாறி செல்வதால் புதிய வேலை கிடைக்கும். வேலை தொழிலில் இடமாற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். திருமண சுப காரியம் நடைபெறும். புத்திர பாக்கியம் கை கூடி வரும். மனநிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்களுக்கு கடந்த சில வருடங்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. காரணம் அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து மீளப்போகிறீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் மன அழுத்தங்கள் நீங்கும். குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் புதிய வரவுகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி அதிர்ஷ்டங்கள் அதிகரிக்கும். ராகுவின் பயணம் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் புதிய தொழில் தொடங்க ஏற்ற காலகட்டமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம் பிள்ளைகளின் படிப்பிற்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, பிறக்கப்போகும் 2022ஆம் ஆண்டு உங்களுக்கு நிறைய படிப்பினைகளைத் தரப்போகிறது. காரணம் கண்டச்சனி காலம் முடிந்து அஷ்டமத்து சனி காலம் ஆரம்பிக்கிறது. செய்யும் வேலைகளில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். உங்களுக்கு உடல் நலத்தில் சில தொந்தரவுகள் வரலாம் கவனம் தேவை. ராகு பத்தாம் வீட்டிற்கும் கேது நான்காம் வீட்டிற்கும் பயணம் செய்வதால் வேலையில் இடமாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு எட்டு மற்றும் ஒன்பதாம் வீடுகளில் பயணம் செய்கிறார். குருவின் பார்வையும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கிடைப்பதால் நன்மைகள் ஏற்படும் சுப காரியங்கள் நடைபெறும். வரவே வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமையப்போகிறது.

English summary

Puthandu rasi palan 2022 tamil: Mesham, rishabam, mithunam and Kadagam Puthandu rasi palan 2022 tamil. Will there be a period of liberation for the people in the New Year 2022? Let’s see how the journey of the new planets will be for those born from Mesham, Rishabam, mithunam and Kadagam.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil AstrologySource
Previous articleரூ.2,000 கோடி கடன் வாங்கும் இந்தியா.. எதற்காக…?!
Next articleFlipkart Offer: வெறும் ரூ. 49-க்கு கிடைக்கிறது அட்டகாசமான Realme ஸ்மார்ட்போன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here