புத்தாண்டு ராசிபலன் 2022: சிம்மம், கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்


Astrology

oi-Jeyalakshmi C

Google Oneindia Tamil News

சென்னை: புத்தாண்டு பிறக்க இன்னும் ஒன்றரை மாதம் மட்டுமே உள்ளது. 2022ஆம் புத்தாண்டு சனிக்கிழமை கேட்டை நட்சத்திரத்தில் பிறக்கிறது உலகமே கொரோனாவின் பிடியில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் பல நாடுகளில் கொரோனாவின் ஆதிக்கம் முடிவுக்கு வரவில்லை. 2021 ஆண்டில் இரண்டாவது அலையில் பல லட்சம் உயிர்கள் பறிபோனது. பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. மழை, வெள்ளம் என இயற்கை சீற்றங்களும் மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. பிறக்கப்போகும் 2022ஆம் புத்தாண்டிலாவது மக்களுக்கு விடிவு காலம் பிறக்குமா? நவ கிரகங்களின் சஞ்சாரப் பார்வை காரணமாக துலாம், விருச்சிகம், தனுசு, மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கு 2022ஆம் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நுழைகிறார். ஜூலை 12ஆம் தேதி வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில் பயணிப்பார். பின்னர் வக்ரகதியில் பின்னோக்கி செல்லும் சனிபகவான் மகர ராசியில் ஆறு மாத காலம் பயணிக்கிறார். பின்னர் நேர் கதியில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கும்ப ராசிக்கு மீண்டும் இடப்பெயர்ச்சியாகிறார். 2025ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் கும்ப ராசியில்தான் பயணம் செய்வார்.

ராகு பகவான் 12.04.22 ஆம் தேதி மாலை 5.08 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
அதே சமயம் கேது பகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குருபகவான் ஏப்ரல் 14, 2022ஆம் ஆண்டு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். 2022ஆம் ஆண்டில் ஜூலை 29ஆம் தேதி மீண்டும் கும்ப ராசிக்கு வக்ரகதியில் திரும்புகிறார். நவம்பர் 24ஆம் தேதியன்று மீண்டும் கும்ப ராசியில் இருந்து நேர்கதியில் மீன ராசிக்கு செல்கிறார் குரு பகவான். இந்த கிரகப்பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சிம்மம்

சிம்மம்

சூரிய பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்களுக்கு பிறக்கப்போகும் 2022ஆம் ஆண்டு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் ராகு பயணிக்கப்போகிறார். மூன்றாம் வீட்டிற்கு கேது வருவதால் பூர்வீக சொத்துக்கள் வரும். வேலை, தொழில் விசயமாக வெளிநாடு பயணம் செல்வீர்கள். இன்பச்சுற்றுலா செல்வீர்கள். திருமணம் சுப காரியம் நடைபெறும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். கேட்ட இடத்திற்கு புரமோசனுடன் கூடிய வேலை மாற்றம் ஏற்படும். குரு பகவான் உங்கள் ராசிக்கு ஏழு மற்றும் எட்டாம் வீடுகளில் பயணம் செய்கிறார். குருவின் பார்வையால் உங்களுக்கு திருமணம் சுபகாரியம் கை கூடும். புத்திரபாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் மீதும் அவர்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை காட்டுங்கள். சனி பகவான் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு செல்கிறார். கண்டச்சனி காலமாக அமையப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சிலர் புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். அதிக சுப பலன்களும், சுப விரைய செலவுகளையும் ஏற்படும். வியாழக்கிழமைகளில் ராகவேந்திரர் மடங்களுக்கு சென்று வணங்கி வரலாம் நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி

கன்னி

2022ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு வேலை தொழிலில் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. நவ கிரகங்களின் அனுகிரகங்களும் உள்ளது. புதனின் ஆதிக்கத்தில் புத்தாண்டு பிறப்பதால் மன குழப்பங்கள் நீங்கி எண்ணங்கள் தெளிவடையும். பொருளாதார நிலை உயரும். அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சுய கவுரவம் மேலோங்கும். புகழ் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பொருளாதார நிலை உயரும். கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கம். சுப காரியம் கை கூடும். இரண்டாம் வீட்டிற்கு கேது பகவான் வருகிறார். 8ஆம் வீட்டிற்கு ராகு வரப்போவதால் வாக்கு கொடுக்கும் முன்பு கவனம் தேவை. வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். குடும்ப விசயங்களில் மூன்றாம் நபர்களை தலையிட விட வேண்டாம். விவசாயத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குருபகவான் ஏழாம் வீட்டிற்கு வந்து உங்கள் ராசியை நேரடியாக பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். பிடித்த வண்டி வாகனம் வாங்கலாம். உயர் கல்வி படிக்க முயற்சி செய்யலாம். படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமணம் சுபகாரியம் கை கூடி வரும். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல யோகம் கை கூடி வரும். வேலை செய்யும் இடத்தில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும் அங்கீகாரம் கிடைக்கப்போகிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போவதால் எதிரிகள் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும்.

துலாம்

துலாம்

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்வையிடுகிறார். நினைத்த காரியம் நிறைவேறும். புதிய திட்டங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் உங்கள் ராசி வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டிற்கு ராகு பகவான் வரப்போகிறார். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். சகோதர சகோதரிகளால் ஒற்றுமை அதிகரிக்கும். தைரியம்,தன்னம்பிக்கை அதிகரிக்கப்போகிறது. தடைகள் நீங்கும் வெற்றிகள் தேடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு தேடி வரும். அர்த்தாஷ்டம சனி முடிவுக்கு வரப்போகிறது சனி பகவான் ஐந்தாம் வீட்டிற்கு செல்லப்போவதால் சொந்த வீடு மனை வாங்கும் யோகம் வரப்போகிறது. தடைபட்ட சுப காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றிகரமாக நிறைவேறும். மாணவர்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். பிடித்த கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். குரு பகவான் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். வளர்ச்சிகள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்தப் புத்தாண்டு நிறைய யோகங்களைத் தரப்போகிறது. தலையில் அமர்ந்து நிறைய சங்கடங்களைக் கொடுத்து வந்த கேது இனி விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். உங்களுக்கு வேலை தொழிலில் இருந்த சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கப்போகிறது. நிறைய ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு ள்ளது. ஆறாம் வீட்டில் ராகு அமரப்போவதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். வீடு வண்டி வாகனம் வாங்கும் யோகம் வரும். வீட்டில் உள்ள வாழ்க்கைத்துணைக்கு மருத்துவ செலவுகள் வரும். மருத்துவ துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல மதிப்பு மரியாதை கூடும். உடல்நிலை சார்ந்த பாதிப்புகள் வந்து நிங்கும். வேலை விசயமாக கணவன் மனைவி இடையே பிரிவு வர வாய்ப்பு உள்ளது. குரு பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் இருந்து 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சென்று அமர்கிறார். பிள்ளைகளுக்கு சுப காரியங்கள் நடைபெறும். திருமணமாகி பிள்ளைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு வரமாக குழந்தை கிடைக்கும். கால புருஷத்தத்துவப்படி லக்னம், ஏழாம் வீடுகளில் ராகு கேது அமர்கின்றன. குருபகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனி பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாகி நான்காம் வீடான கும்ப ராசியில் 55 நாட்கள் தங்கியிருப்பார். இந்த நாட்கள் மிக முக்கியமான நாட்கள். நிறைய நன்மைகள் நடைபெறும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். கும்பாபிஷேக பணிகளில் பங்கேற்பீர்கள். கடன் , நோய் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும். புதிய தொழில் வியாபாரம் தொடங்கலாம். சிலருக்கு அரசு வேலைகள் கிடைக்கலாம். சொத்துக்கள் வாங்கலாம். அர்த்தாஷ்டம சனி என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. வாழ்க்கையில் சுபிட்ஷங்கள் அதிகரிக்க விநாயகரை வழிபடலாம் நன்மை நடைபெறும்.

English summary

Puthandu rasi palan 2022 tamil. Will there be a period of liberation for the people in the New Year 2022? Let’s see how the journey of the new planets will be for those born from Simmam, Kanni, Thulam and Viruchigam Rasigal luck and fortune.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil AstrologySource
Previous articleநார்வே அமைச்சரின் போலி கணக்கை உறுதி செய்த சுட்டுரை: ஆனால்..
Next articleBest Selling Car: இந்தியாவில் சூப்பராக விற்பனையாகும் கார் இதுதான், உங்ககிட்ட இருக்கா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here