பெற்றோர் கவனத்திற்கு… குழந்தைகளின் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் இந்த செயல்களை செய்துவிடாதீர்கள்!

பெற்றோர் கவனத்திற்கு… குழந்தைகளின் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் இந்த செயல்களை செய்துவிடாதீர்கள்!


ஒரு குழந்தையின் வளர்ப்பில் பெற்றோருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டும். ஒரு பெற்றோர் கவனக்குறைவாக அல்லது தங்கள் குழந்தையின் தவறான நடத்தையை மேம்படுத்தும் வகையிலோ நடந்துகொண்டால், அது உங்கள் குழந்தையில் உளவியல் ரீதியாக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். நாம் செய்யும் சில விஷயங்கள் குழந்தைகளில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துமா என்று நீங்கள் யோசிக்கலாம்?

மேலும் சில பெற்றோர்கள் தாங்கள் செய்யும் சில தவறுகளை ஒப்புக்கொள்வதே இல்லை. ஆனால் பெற்றோரின் சில செயல்கள் குழந்தைகளில் நடத்தை சிரமங்கள் மற்றும் மனநலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் திறன்களை மேம்படுத்தவும், உங்கள் குழந்தையின் சுயமரியாதையையும் நம்பிக்கையையும் பலப்படுத்தவும் விரும்பினால், பெற்றோர்கள் தவிர்க்க சில மோசமான பழக்கவழக்கங்களை பற்றி விரிவாக காண்போம்.

பொருத்தமற்ற பெயர்களுடன் குழந்தைகளை அழைக்கக்கூடாது:

பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ‘பிராட்’, ‘தகுதியற்றவர்கள்’ அல்லது ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்’ போன்ற பெயர்களை கொண்டு அழைப்பதை மிக இயல்பானதாகக் கருதுகின்றனர். மேலும் சில பெற்றோருக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே தோன்றாது. ஆனால் இது போன்ற செயல் அவமரியாதைக்குரியதாக கருதப்படுகிறது. சில பொருத்தமற்ற குறிச்சொற்களின் வடிவத்தில் உங்கள் குழந்தையை நீங்கள் திட்டும் போது, அது அவர்களில் விரும்பத்தகாத எண்ணங்களை தோற்றுவிக்கும். அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படுவதோடு, கவனிப்பிற்காக பெற்றோரை நம்புவதில் குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை குறைகிறது.

Must Read | கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாமா? ஆய்வு சொல்லும் தகவல் என்ன?

‘எப்போதும்’ / ‘ஒருபோதும்’ சரியாக செய்ததே இல்லை போன்ற தீவிர சொற்களை பயன்படுத்தாதீர்கள்:

“நீங்கள் ஒருபோதும் உங்கள் ஷூ லேசை சரியாக கட்ட மாடீர்கள்” அல்லது “நீங்கள் எப்போதும் தாமதமாக தான் கிளம்புவீர்களா” போன்ற தீவிரமான சொற்களை சிறிய விஷயங்களுக்கு கூட உங்கள் குழந்தைகளிடம் பயன்படுத்தலாம். ஆனால் இந்த வார்த்தைகள் குழந்தையின் சுயமரியாதை, உந்துதல் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றில் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இது உங்கள் பிள்ளைக்கு விஷயங்கள் மற்றும் அவற்றின் திறன்களைப் பற்றி ஒரு நிலையான அணுகுமுறை அல்லது மனநிலையை வளர்க்க வழிவகுக்கும். சில சமயங்களில் நீங்கள் இந்த சொற்களை உபயோகிக்கும் போது அவர்கள் மனச்சோர்வையோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ உணரக்கூடும்.

ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்கவும்:

அனைத்து பெற்றோர்களும் செய்யும் ஒரே தவறு என்னவென்றால் பிற குழந்தைகளுடன் தன் குழந்தையை ஒப்பிட்டு பேசுவது தான். பெற்றோர் தனது குழந்தையின் திறன்களை அல்லது சாதனைகளை அருகிலுள்ள எந்தவொரு குழந்தையுடனும் ஒப்பிட்டுப் பார்க்கிறீர்களா?, அல்லது “நீ ஒருபோதும் உங்கள் சகோதரரைப் போல புத்திசாலித்தனமாக இல்லை” என்று குழந்தையின் சகோதர, சகோதரிகளுடன் ஒப்பிட்டு பெறுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் குழந்தையின் பலத்தை முற்றிலும் நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மேலும், புதிய திறன்கள் அல்லது சாகசங்களை மேற்கொள்வதற்கான அவர்களின் நம்பிக்கையை பலவீனப்படுத்துகிறீர்கள். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான திறமையை கொண்டிருக்கின்றனர். உங்கள் குழந்தை கணிதத்தில் பெரிதாக சாதிக்காதவராக இருக்கலாம். ஆனால் அவர் நீச்சல் அல்லது பாடுவதில் அதிக திறமை கொண்டவராக இருப்பார். எனவே அவர்களை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிட்டு அவமதிக்காமல், அவர்களில் இருக்கும் தனித்தன்மையை கவனித்து அதனை பாராட்டுங்கள்.

பழி சுமத்துவது கூடாது:

ஒழுக்கம் என்பது ஒரு அற்புதமான விஷயம், ஆனால் பெற்றோர்கள் அதைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதத்தில் அதை தங்கள் குழந்தைகளில் ஊக்குவிக்கக்கூடாது. சிறிய விதிமீறல்களுக்கு கூட அவர்களைக் குறை கூறுவதும், அவர்களைத் தண்டிப்பதும், மற்றவர்களுக்கு முன்னால் அவர்களை அசிங்கப்படுத்துவதும் அவர்களை பயனற்றவர்களாகவும் சக்தியற்றவர்களாகவும் உணரவைக்கும். தொடர்ச்சியான தண்டனைகள் மற்றும் விமர்சனங்கள் ஒரு குழந்தையின் சுயமரியாதையையும், பல சந்தர்ப்பங்களில், திருப்திகரமான வாழ்க்கையை வாழ்வதற்கான திறனையும் அவர்களில் அழிக்கின்றன.

உங்கள் குழந்தை முன்பு கத்தகூடாது:

தங்கள் குழந்தை தவறு செய்யும் போது அவர்களிடம் கோபமாக கத்துவது, அல்லது அலறுவது பயனற்றது. பயம் கத்துவதற்கு சமம், மற்றும் பயம் என்பது அன்பின் எதிர்விளைவாகும். நீங்கள் அதை அடிக்கடி செய்யும் போது உங்கள் குழந்தைகளின் பாசத்தை இழக்கலாம். உங்கள் சொந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த தூண்டுதல்களைத் தீர்மானிக்க முயற்சிக்கவும் அல்லது தேவைப்படும்போது அமைதியை கடைபிடிக்கவும். கத்துவதை விட, மாற்று வழிகளில் அவர்களிடம் எடுத்து சொல்ல முயற்சி செய்யுங்கள். குழந்தைகளில் குறைவான பயத்தை ஏற்படுத்துவதற்கு உங்கள் தொனியையும், உங்கள் முகம் மற்றும் உடல் மொழியையும் சரிசெய்ய கற்றுக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் எதிர்காலத்தில் அவர்கள் தவறுகள் செய்ய யோசிப்பார்கள்.

Must Read | ஆண்களுக்கும் உண்டு மகப்பேறுக்கு பிறகான மனச்சோர்வு! அதற்கான அறிகுறிகள்!

உங்கள் குழந்தையின் தனிப்பட்ட இடத்தின் அத்துமீறல்:

குழந்தையின் தனிப்பட்ட இடத்தை மதிக்க வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை. குழந்தைகளுக்கும் அவர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கவும் சேகரிக்கவும் பொருத்தமான நேரம் தேவை. எல்லோரும் தவறுகளைச் செய்கிறார்கள் மற்றும் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள். ஆனால் அது வாழக்கை முழுவதும் தொடருவதில்லை. குழந்தைகளும், மற்றவர்களைப் போலவே, தங்கள் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள். முடிவெடுப்பதில் அதிக நம்பிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கிறார்கள்.

எனவே, உங்கள் பிள்ளைகளின் தனிப்பட்ட நேரத்தை அனுபவிக்க அனுமதிக்கவும். அவர்கள் மோசமான முடிவுகளை எடுத்தால், அது இறுதியில் அவர்களை அனுபவமிக்கவர்களாக மாற்றி, வாழ்க்கை அவர்கள் மீது வீசும் பிரச்சினைகளைச் சந்திக்க அவர்களைத் தயார்படுத்தும். இருப்பினும், நீங்கள் அச்சுறுத்தலைக் கண்டறிந்தால் அல்லது சமூக அல்லது ஆன்லைன் கொடுமைப்படுத்துதல், துஷ்பிரயோகம் அல்லது பிற வன்முறைகளால் உங்கள் பிள்ளை பாதிக்கப்படுகிறார் என்று சந்தேகிக்கும்போதெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் பாசத்தைத் வெளிக்காட்டாமல் இருக்கக்கூடாது:

ஒரு ஜாலியான பெற்றோராக இல்லாமல் கடுமையான மற்றும் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாத பெற்றோர்களாக இருந்தால், அது உங்கள் பிள்ளைக்கு அமைதியற்ற சூழலை ஏற்படுத்தக்கூடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வளவு நேசிக்கிறார்கள், கவனித்துக்கொள்கிறார்கள் என்று சொல்லி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். அது அவர்களுக்கான உங்கள் அன்பும் மதிப்பும் அவர்களின் அணுகுமுறையில் நிபந்தனை என்று நம்புவதற்கு அவரை வழிநடத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous articleநவம்பர் Now என்ன சமாளிக்க முடியல ல – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்
Next articleபாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போதைய நிலைமை – இணையத்தில் வைரலாகும் சீரியல் மீம்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here