பொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த சங்கராபுர மக்கள்

பொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த சங்கராபுர மக்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜா என்பவர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. 

மாரியம்மன் கோவிலுக்குச் செல்ல அப்பகுதி கிராம மக்கள் ராஜாவின் வீட்டை ஒட்டிய 3 சென்ட் நிலத்தை பொதுப்பாதைக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ராஜாவோ பட்டா செய்துக் கொடுக்கப்பட்ட இடத்தை எப்படி தானமாக அளிப்பது எனக் கூறி, பொதுவழிக்காக இடத்தைக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஊர்மக்கள் ஒன்றுகூடி திட்டமிட்டனர். ராஜாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறாதபடி வீட்டின் வாயில் முன்பு, கோயில் இடத்துக்குச் சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைத்துள்ளனர். இதனால் கடந்த ஒருவாரமாக வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், ஊருக்குள் சென்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமலும் ராஜா குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.

READ ALSO | துப்பாக்கி முனையில் வழிப்பறி கொள்ளையர்கள் கைது

இதுகுறித்து ராஜாவிடம் கேட்டபோது, எங்களது பட்டா இடத்தில் வழி கேட்டனர். மறுத்து விட்டதால், எனது வீட்டுக்கு முன்புள்ள கோயில் நிலத்தில் (Temple Land) கம்பிவேலி அமைத்து நாங்கள் வெளியே புழங்க முடியாத அளவுக்கு தடை செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.  இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என்றார்.இதனால் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து சங்கராபுரம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, அப்பிரச்சனைத் தொடர்பாக கம்பி வேலி அமைப்பதற்கு முன் புகார் வந்தது. கம்பிவேலி அமைத்தபின் புகார் ஏதும் வரவில்லை. நிலம் தொடர்பான பிரச்சனை என்பதால் வருவாய் துறையினர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பிரச்சனை தொடர்பாக ராஜா குடும்பத்தினருக்கும், ஊர்மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் தெரிவித்தார்.

ALSO READ | கோவை மாணவி தற்கொலை வழக்கில் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: City NewsSource
Previous articleசவுரப் சவுத்ரி ‘தங்கம்’: தேசிய துப்பாக்கி சுடுதலில் | National Shooting Championship, 50m pistol, Saurabh Chaudhary, Gold Medal
Next articleவந்தது அறிவிப்பு.. 2 டோஸ் போட்டுக் கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்திற்கு வர அனுமதி..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here