ராஜீவ்காந்தி பேரை சொல்லி கொண்டாடுவோம்… தி.மு.கவை விமர்சித்து ராமதாஸ் திடீர் பதிவு

Home


தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியதிலிருந்தே தி.மு.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 138-ல் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், பணம் கொடுத்து தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்றது என்று எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

தி.மு.க வெற்றியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையிலான பா.ம.க நிறுவனர் ராமதாஸின் ஃபேஸ்புக் பதிவில், ‘

எல்லோரும் கொண்டாடுவோம்,

காந்தியடிகளின் பெயரைச் சொல்லி,

ராஜிவ் காந்தியின் சட்டத்தைச் சொல்லி

எல்லோரும் கொண்டாடுவோம்!

காந்தி கனவு கண்டது கிராம சுயராஜ்யம்…

ராஜிவ் கொண்டு வந்ததுபஞ்சாயத்து ராஜ்யம்

இரண்டும் தழைத்து செழித்திடவே தமிழகத்தில்

ஜனநாயகம் கடுமையாக உழைக்கிறதே!

மாவட்ட ஊராட்சி உறுப்பினர் 140 பதவி

ஒன்றியக் குழு உறுப்பினர் 1381 பதவி

இத்தனை பதவிகளையும் ‘ஒரு பைசா கூட

செலவின்றி வென்றிருக்கிறார்கள் என்றால்

ஜனநாயகம் ’ஓங்கி’ வளர்ந்து விட்டதாகத் தானே அர்த்தமாகும்!

இனி காந்தியின் கிராம சுயராஜ்ய கனவு நனவாகும்

ராஜிவ் காந்தியின் பஞ்சாயத்து ராஜ்யம் செழிக்கும்

ஆகவே இன்னொருமுறை எல்லோரும் சொல்லுங்கள்…

‘காந்தி, ராஜிவ் பேரைச் சொல்லி எல்லோரும் கொண்டாடுவோம்’என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: News18 TamilSource
Previous articleபண்டிகை நாட்களுக்கு இப்படியும் ரெடி ஆகலாம்.. நடிகை ஸ்ரேயா ஸ்டைலிங் டிப்ஸ்..
Next articleசபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here