வந்தது அறிவிப்பு.. 2 டோஸ் போட்டுக் கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்திற்கு வர அனுமதி..!

வந்தது அறிவிப்பு.. 2 டோஸ் போட்டுக் கொண்ட  வெளிநாட்டினர் நியூசிலாந்திற்கு வர அனுமதி..!


International

oi-Hemavandhana

Google Oneindia Tamil News

வெலிங்டன்: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வெளிநாடு செல்ல நியூசிலாந்து அரசு அனுமதி தந்துள்ளது.. 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது…

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 77 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்… இதுவரை 23 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரத்து 663 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51,91,266 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூசிலாந்து: பயங்கரவாத தாக்குதல் நடத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் இலங்கை காத்தான்குடி இளைஞர்! நியூசிலாந்து: பயங்கரவாத தாக்குதல் நடத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர் இலங்கை காத்தான்குடி இளைஞர்!

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 1,02,563 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் 48,967,759 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. சில நாடுகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மறுபடியும் தலைதூக்கிவிட்டது.. சீனா, ஜெர்மன், போன்ற நாடுகளில் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.. எனினும் அனைத்து நாடுகளுமே தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

 வெளிநாட்டு பயணிகள்

வெளிநாட்டு பயணிகள்

இதனிடையே பல்வேறு நாடுகள் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை லேசாக தளர்த்தி வருகின்றன.. அந்த வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வெளிநாட்டு பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு தடை விதித்தது… அத்துடன், நாட்டின் எல்லைகளையும் அடைத்துவிட்டது.. அதற்கு பிறகுதான் தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது.. அதற்கு பிறகு ஏகப்பட்ட கண்டிஷன்களை விதித்துதான், மற்ற நாட்டினரை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் நிலைமை வந்தது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

அந்த வகையில், ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தடையின்றி ஆஸ்திரேலியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. 2 டோஸ் கோவேக்சின் போட்டுக்கொண்ட 12 வயதுக்கு மேல் உள்ளவர்களும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பிபிஐபிபி கார்வி தடுப்பூசியின் 2 டோஸ் போட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுபோல பல நாடுகள் உள்ள நிலையில், இந்த லிஸ்ட்டில்தான் நியூசிலாந்து சேர்ந்துள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்துக்கு வரலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கொரோனாவைரஸ் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு அமைச்சர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இதை பற்றி சொல்லும்போது, தொற்றில் இருந்து நம்முடைய நாட்டை பாதுகாப்பாக வைத்திருந்ததாக, அன்று நாம் எடுத்த உறுதியான நடவடிக்கையானது, நம்முடைய எல்லைகளை மூடுவதுதான்..

அனுமதி

அனுமதி

அதே போல் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் நம்முடைய கடைசி நடவடிக்கை எல்லைகளை திறப்பதுதான்.. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முழுயைாக தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள், அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் நியூசிலாந்து வரலாம்.. அதேபோல, 2 டோஸ் முழுமையாக எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30-ந்தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என்றார்.

English summary

New Zealand to reopen to vaccinated visitors from February 13th

Story first published: Thursday, November 25, 2021, 10:18 [IST]
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More – Oneindia TamilSource
Previous articleபொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த சங்கராபுர மக்கள்
Next articleரூ.2,000 கோடி கடன் வாங்கும் இந்தியா.. எதற்காக…?!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here