வந்தார்.. வென்றார்.. செயலாற்றுகிறார்.. வேலூரில் விஜய் பெயரை காப்பாற்றிய வெற்றியாளர்!

வந்தார்.. வென்றார்.. செயலாற்றுகிறார்.. வேலூரில் விஜய் பெயரை காப்பாற்றிய வெற்றியாளர்!


Vellore

oi-Vishnupriya R

Google Oneindia Tamil News

வேலூர்: வேலூரில் உள்ளாட்சி தேர்தலில் வென்றவுடன் விஜய் ரசிகர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்கள்.

நாம் தமிழரை விட அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் முன்னிலை பெற்றது எப்படி?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை போட்டியிட்டன.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

இந்த தேர்தலுக்கான வாக்குகள் கடந்த 12 ஆம் தேதி எண்ணப்பட்டன. இதில் திமுக மகத்தான வெற்றியை பெற்றது. மக்கள் நீதி மய்யம் படுதோல்வி அடைந்தது. அது போல் நாம் தமிழர் கட்சியும், பாஜகவும் தோல்வி அடைந்தன.

9 மாவட்டங்கள்

9 மாவட்டங்கள்

இந்த நிலையில் இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் போட்டியிட்டனர். இவர்கள் 9 மாவட்டங்களிலும் 169 இடங்களில் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமான வெற்றியை பெற்றனர்.

13 பேர் போட்டியின்றி தேர்வு

13 பேர் போட்டியின்றி தேர்வு

நேற்று முன் தினம் மாலை வரை வார்டு உறுப்பினர்கள் 36 பேர் வென்றனர். 13 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமாக 49 பேர் வென்றனர். நேற்று வரை நீடித்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. 9 மாவட்டங்களிலும் இதுவரை 109 பேர் வென்றுள்ளனர்.

புஸ்ஸி ஆனந்த்

புஸ்ஸி ஆனந்த்

இந்த தகவலை தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரதான கட்சியினரே தோல்வியை சந்தித்த நிலையில் அரசியலுக்கே வராமல் வென்று காட்டிய விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்ற கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துவிட்டது.

6ஆவது வார்டு

6ஆவது வார்டு

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்குள்பட்ட தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் 6 ஆவது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் வென்றார். அந்த பகுதியில் திருட்டு பயம் இருப்பதால் அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்குமாறு நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் வெற்றி பெற்ற மறுநாளே சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இறங்கியுள்ளது பலரது பாராட்டுக்குள்ளாகியுள்ளது.

English summary

Vijay Makkal Iyakkam candidate who won in local body election fulfills people long term demand.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Oneindia.in – thatsTamilSource
Previous articleஉலகளாவிய பசி குறியீடு: 101வது இடத்தில் இந்தியா
Next articleபிஎம்டபிள்யூ பைக்குகளின் தயாரிப்பில் 1 லட்சத்தை கடந்தது டிவிஎஸ்!! அனைத்தும் ஓசூரில் தயாரிக்கப்பட்டவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here