வாட்ஸ்ஆப்பில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்

WhatsApp12_0


WhatsApp12_0

வாட்ஸ்ஆப்பில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம்

 

இந்திய வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு ‘ஃப்ளாஷ் கால்ஸ்’ மற்றும் ‘மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங்’ என்ற இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஃப்ளாஷ் கால்ஸ்

அடிக்கடி செல்போன்களை மாற்றுபவர்கள், வாட்ஸ்ஆப்பை தங்கள் மாற்றும் போன்களில் பதிவிறக்கம் செய்யும்போது மெஸேஜ் மூலம் சாரிபார்க்கப்படும். ஆனால், இனிமேல் தானியங்கி அழைப்பு மூலமே சரிபார்க்கப்படும்.  

மெஸேஜை விட தானியங்கி அழைப்பு மூலம் சரிபார்க்கப்படுவது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் கருதுகிறது.

மெசேஜ் லெவல் ரிப்போர்ட்டிங்

இந்த புதிய அம்சம் மூலம், தேவையில்லாத அல்லது விருப்பம் இல்லாதவர்களை பிளாக் அல்லது ரிப்போர்டிங் செய்வதற்கு பதிலாக அந்த மெஸேஜை அழுத்தி பிடித்தால், பயனரின் ப்ரொஃபைல் படம், கடைசி பார்வை(லாஸ்ட் சீன்) உள்ளிட்டவை தெரியாது.

இதனிடையே, வாட்ஸ்ஆப் நிறுவனமானது முகநூல் போன்று வாட்ஸ்ஆப்பிலும் மெஸேஜ் ரியாக்சன் முறையை ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Dinamani – வணிகம் – https://www.dinamani.com/trade/Source
Previous articleபிசிஓஎஸ் உள்ள பெண்கள் பூசணி விதைகளை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!
Next articleiPhone வாங்கிய உடன் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here