ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு… எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் தற்போது வாகனங்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. இதற்கு உலகின் மிகப்பெரிய டூவீலர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப்பும் விதிவிலக்கு அல்ல. கடந்த அக்டோபர் மாதம் ஹீரோ நிறுவன டூவீலர்களின் விற்பனை குறைந்துள்ளது. ஒரே ஒரு பைக் மட்டும்தான் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அது எக்ஸ்பல்ஸ் 200 (Hero Xpulse 200).

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஹீரோ நிறுவனம் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்திய சந்தையில் 3,815 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இது வெறும் 2,473 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் விற்பனையில் 54.27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் ஹீரோ நிறுவனம் இந்திய சந்தையில் 3,375 எக்ஸ்பல்ஸ் 200 பைக்குகளை விற்பனை செய்திருந்தது. அதன் பின் வந்த அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 3,815 ஆக உயர்ந்துள்ளது. மாதாந்திர ரீதியில் பார்த்தால் இது 13.04 சதவீத வளர்ச்சியாகும். இவை இரண்டுமே சிறப்பான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலை குறைவான அட்வென்ஜர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்று என்ற பெருமை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு உள்ளது. தற்போதைய நிலையில் ஸ்டாண்டர்டு மற்றும் 4வி என மொத்தம் 2 வேரியண்ட்களில் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 1.23 லட்ச ரூபாய் ஆகும்.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் 4வி வேரியண்ட்டின் விலை 1.28 லட்ச ரூபாயாக உள்ளது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 199.6 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டில் அதிகபட்சமாக 18.08 பிஎஸ் பவரையும், 16.45 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் 4வி வேரியண்ட்டில் இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19.1 பிஎஸ் பவரையும், 17.35 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும் வல்லமையை பெற்றுள்ளது. ஆனால் இந்த 2 வேரியண்ட்களிலுமே 5 ஸ்பீடு கியர் பாக்ஸ்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி லைட்டிங், இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதுதவிர சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் உயரமான வைசர் உள்பட பல்வேறு வசதிகளை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பெற்றுள்ளது. அதே சமயம் இந்த பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீலும், பின் பகுதியில் 18 இன்ச் வீலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்குடன், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 போட்டியிட்டு வருகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனை கிடுகிடு உயர்வு... எவ்ளோ அதிகமாயிருக்குனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அத்துடன் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு விலை குறைவான மாற்று தேர்வாகவும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 திகழ்கிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த அட்வென்ஜர் டூரர் ரக பைக் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இந்த பைக் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: All auto newsSource
Previous articleசிஎஸ்கே அணியில் நீடிக்கும் தோனி? அடுத்த 3 சீசன்களுக்கு தக்கவைப்பு?
Next articleஉலகின் முதல் மிதக்கும் தற்சாற்பு நகரம் – 5 லட்சம் சதுரமீட்டரில் கடலில் ஒரு பிரம்மாண்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here