30 பெரிய உருமாற்றம்.. தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா.. வல்லுனர்கள் வார்னிங்!

 உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா.. இதுவரை 256,294,400 பேர் பாதிப்பு.. 5,146,053 பேர் பலி


International

oi-Shyamsundar I

Google Oneindia Tamil News

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. அந்நாட்டு மக்கள் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பல்கி பெருகும் போது ஒரே மாதிரி பெருகாமல், அதன் ஸ்பைக் புரோட்டின்களில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால் அதுவே உருமாற்றம் அல்லது மியூட்டேஷன் என்று அழைக்கப்படும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் பரவி அது வேறு ஒருவருக்கு பரவும் நேரத்தில் ஒரே மாதிரி பரவாமல் வைரஸில் இருக்கும் புரோட்டின்கள் மாற்றம் அடைந்தாள் அது உருமாற்றம் என்று கருதப்படும்.

கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க உலகம் முழுக்க புதிய உருமாறிய வகை கொரோனா தோன்றி வருகிறது. இப்படி உருமாறி உருவான டெல்டா, ஆல்பா வகை கொரோனா வைரஸ்கள் உலகம் முழுக்க 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

சபாஷ் ஷ்ரேயாஸ்.. சீறி அடங்கிய சுப்மன் கில்.. மிரட்டிய கைல் ஜேமிசன்.. சொதப்பிய ரஹானே! சபாஷ் ஷ்ரேயாஸ்.. சீறி அடங்கிய சுப்மன் கில்.. மிரட்டிய கைல் ஜேமிசன்.. சொதப்பிய ரஹானே!

வைரஸ்

வைரஸ்

தற்போது உலகம் முழுக்க பல்வேறு வகை மியூட்டேடட் வைரஸ்கள் பரவி வருகின்றன. நாம் கண்டுபிடித்தததை விட நாம் கண்டுபிடிக்காத பல புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள்தான் அதிகம் உள்ளன. சில சமயங்களில் வேக்சின் போட்டவர்களுக்கு கூட இந்த உருமாறிய வைரஸ்கள் பரவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. அந்நாட்டு மக்கள் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் பரவும் இந்த புதிய வகை உருமாறிய கொரோனா B.1.1529 என்று அழைக்கப்படுகிறது. அதுதான் பல நாடுகளில் புதிய வகை உருமாறிய கொரோனா பரவுகிறதே இதில் என்ன ஆபத்து இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் இந்த B.1.1529 கொஞ்சம் வித்தியாசமானது. இது ஒருமுறை, இரண்டு முறை அல்ல.. மொத்தம் 30 முறை உருமாற்றம் அடைந்துள்ளது.

சோகம்

சோகம்

இதில் சோகம் என்னவென்றால் தென்னாப்பிரிக்க மருத்துவர்கள் இது உருவானதற்கு கூறும் காரணம்தான். ஏற்கனவே பிற நோய்கள் இருக்கும் ஒரு நபருக்கு கொரோனா வந்து அவர் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரில் உடலில் இந்த புதிய வகை கொரோனா வகை உருவாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். எச்ஐவி போன்ற நாள்பட்ட நோயாளிக்கு கொரோனா தாக்கி இருக்கும் பட்சத்தில் அவரின் உடலில் இந்த மியூட்டேஷன் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

முடியவில்லை

முடியவில்லை

இந்த வைரஸ் எவ்வளவு வேகமாக பரவும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போதுவரை நினைத்ததை விட வேகமாக பரவி உள்ளது. ஹாங்காங், போட்ஸ்வானா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 30 கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொஞ்சம் கவலைதரக்கூடிய வைரஸாக இது இருக்கலாம் என்று தென்னாப்பிரிக்க மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏன் சிக்கல்

ஏன் சிக்கல்

ஆல்பா, பீட்டா, மியூ, காமா போன்ற பல்வேறு வகை உருமாறிய வைரஸ்களில் காணப்பட்ட மாற்றம் இதிலும் காணப்படுகிறது. P681H, N679K, N501Y போன்ற உருமாற்றங்கள் இதிலும் உள்ளது. அதாவது பல உருமாறிய கொரோனா வைரஸ்களின் கலவையாக இந்த புதிய B.1.1529 உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பது போக போக ஆராய்ச்சிகளுக்கு பின்புதான்தான் என்று அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

Coronavirus: 30 mutations in a new variant found in South Africa Coronavirus: 30 mutations in a new variant found in South Africa causes worries.

Story first published: Thursday, November 25, 2021, 18:15 [IST]
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More – Oneindia TamilSource
Previous articleஎவ்வளவு துவைச்சாலும் போகாத கறைகளை இந்த சமையலறை பொருட்களை வைத்து ஈஸியா விரட்டிரலாம் தெரியுமா?
Next articleஇதுதான் புதிய தலைமுறை S-Cross-ஆ! மைல்டு-ஹைபிரிட் வசதி உடன் வேற லெவல்ல இருக்குது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here