Nostradamus Predictions for 2022: மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு

Nostradamus Predictions for 2022: மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


Nostradamus Predictions for 2022: பிரான்சின் பிரபல ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். உலகத்தைப் பற்றிய அவரது கணிப்புகள் பிரபலமானவை. அவற்றில் பல உண்மையாக நடந்துள்ளன. தற்போது 2022ஆம் ஆண்டு குறித்த அவரது கணிப்பு வெளியாகியுள்ளது. கவலையை ஏற்படுத்தும் அந்த கணிப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

உலகில் அணுகுண்டு வெடிக்கும்
நோஸ்ட்ராடாமஸின் கூற்றுப்படி, அடுத்த ஆண்டு அதாவது 2022ம் வருடம், உலகில் மிகவும் ஆபத்தான அணுகுண்டு வெடிக்கும். அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் உலகின் தட்பவெப்ப நிலை மாறி பிரம்மாண்டமான பனிப்பாறைகள் முற்றிலும் உருகும். இதனால் உலகிலுள்ள கடல்களின் நீர்மட்டம் அதிகரிக்கும். இதனால் பல தீவுகளும் சிறிய நாடுகளும் நீரில் மூழ்கும். கோடிக்கணக்கான மக்கள் கதிர்வீச்சினால் அகால மரணமடைவார்கள், எஞ்சியிருப்பவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும்.  

3 நாட்களுக்கு உலகத்தை இருள் சூழும்   
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2022ம் ஆண்டு மிகவும் அழிவுகரமானதாக இருக்கும். பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும் (Mass level Death). அந்த நேரத்தில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக, உலகமே 3 நாட்களுக்கு இருளில் மூழ்கும். அப்போது, உலக நாடுகளில் தொடங்கிய போர் திடீரென நின்றுவிடும். மூன்று நாட்களுக்குப் பிறகு, உலகம் வெளிச்சத்தைக் காணும்போது, நவீனத்துவத்தின் முடிந்துபோய், மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும்.  

READ ALSO | கருடபுராணத்தின் இந்த 7 விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், நரகமும் வெகு தூரமே!

சிறுகோள் பூமியுடன் மோதும்
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, 2022 ஆம் ஆண்டில், பெரிய வானியல் நிகழ்வு நிகழும். அடுத்த ஆண்டில், ஒரு கிரகத்தில் இருந்து உடையும் சிறுகோள் ஒன்று, மிக அதிக வேகத்தில் வந்து பூமியைத் தாக்கும். அந்த சிறுகோள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து கடலில் விழும். அந்த சிறுகோளின் அளவு மிகப் பெரியதாக இருக்கும் என்பதால் கடலில் வலுவான அலைகள் எழுந்து சுனாமி உருவாகும். எனவே, கடலுக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளின் கரையோரப் பகுதி முற்றிலுமாக அழிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள்.

earth

மனிதகுலத்தின் மீதான AI தாக்குதல்
2022 ஆம் ஆண்டில், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கணினிகள் மற்றும் ரோபோக்களே மனிதகுலத்திற்கு எதிரியாக மாறும் என்று நோஸ்ட்ராடாமஸின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் மனதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ரோபோக்கள் கட்டுப்பாடற்றதாக மாறி ஒட்டுமொத்த மனித இனத்தையும் பூமியில் இருந்து அழித்துவிடும்.

பிரான்சில் சூறாவளி 
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி (Astrology Prediction), அடுத்த ஆண்டு பிரான்சுக்கும் மிகவும் கடுமையானதாக இருக்கும். 2022 ஆம் ஆண்டில் ஏற்படும் பெரிய புயலினால், விவசாயத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும், அதன் காரணமாக ஏற்படும் பஞ்சத்தினால் மனிதகுலமே துன்பப்படும்.
 
கடுமையான பணவீக்கம்  
நோஸ்ட்ராடாமஸின் கணிப்பின்படி, அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும். பிட்காயின், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை சொத்துகளாக கருதப்படும். அமெரிக்க டாலரில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். உலகில் பணவீக்கம் மிகவும் அதிகரிக்கும், இதன் காரணமாக மில்லியன் கணக்கான ஏழைகள் பட்டினியால் உயிரிழப்பார்கள்.

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை.)

ALSO READ | இப்படிப்பட்ட விரல் கொண்டவரிடம் இருந்து விலகியிருக்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR




DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: World NewsSource
Previous articleஜோஷ்னா, கோசால் தேர்வு: ஆசிய ஸ்குவாஷ் தொடருக்கு | Asian Squash Team Championship, Kuala Lumpur, India Squad, Saurav Ghosal, Joshna Chinappa
Next articleஅடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here