Palmistry: இப்படிப்பட்ட விரல் கொண்டவரிடம் இருந்து விலகியிருக்கவும்! ஏமாற்றுக்காரர்கள்!!


புதுடெல்லி: கைரேகை என்பது கையில் உள்ள கோடுகளைப் பற்றி மட்டும் பேசுவதில்லை, இதன் மூலம் எந்தவொரு நபரின் முழு ஆளுமையையும் சரிபார்க்க முடியும். சில வகையான விரல்களைக் கொண்டவர்கள் பிறரை ஏமாற்றக்கூடிய தன்மையைக் கொண்டவர்கள். அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கைரேகை சாஸ்திரம் கூறுகிறது.  

நீண்ட விரல்கள்
ஒரு நபரின் விரல்கள் இயல்பை விட நீளமாக இருந்தால், அந்த விரல்களைக் கொண்டவர்கள், எந்தவொரு விஷயத்தின் வேர் வரை சென்று ஆராய்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் கேட்ட பிறகு அதன் ஆழத்தை அறிய முயல்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம் சாதாரணமாகப் பேசலாம், ஆனால் அந்தரங்க விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

கைரேகையின் படி (Palmistry), ஒருவரின் விரல்கள் மிகவும் அகலமாக இருந்தால், அவர்களை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய மக்கள் சுதந்திரமான இயல்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.

ALSO READ | ஜாதகத்தில் இந்த தோஷங்கள் பாடாய் படுத்தாமல் இருக்க பரிகாரங்கள்

அவர்கள் தங்கள் சொந்த நலனை மட்டுமே நினைக்கிறார்கள், மற்றவர்களின் விருப்பங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள். எனவே, அப்படிப்பட்டவர்களை நம்புவதற்கு முன், ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படவும்.  

ஒரு நபரின் விரல் அதிகமாக வளைந்திருந்தால், நீங்கள் அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகையவர்கள் பாசாங்கு செய்பவர்கள் (Fake People) என்றும் அவர்களின் இனிமையான வார்த்தைகள், அலங்காரத்திற்காக மட்டுமே பேசப்படுபவை என்றும் நம்பப்படுகிறது. அவர்கள் தங்கள் வேலையைச் செய்ய யாருடனும் சர்க்கரை போல இனிமையானவர்களாக மாறலாம், ஆனால் தங்கள் காரியம் முடிந்துவிட்டால், தேவையில்லாதவர்களை கழற்றிவிட தயங்கமாட்டார்கள்.  

சதுர வடிவ விரல் முனை கொண்டவருடன் நட்பு கொள்வது நல்லது
ஒருவரின் விரல்களின் முனைகள் சதுரமாக இருந்தால், அவர்களுடன் நட்பு கொள்வது நன்மை பயக்கும். அத்தகையவர்கள் தங்கள் உறவுகளை மிகுந்த நேர்மையுடன் அணுகுவார்கள் என்று நம்பப்படுகிறது. எந்தப் பிரச்னை வந்தாலும் விலகிச் செல்ல மாட்டார்கள். 

(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை)

ALSO READ | இந்த ராசிக்காரர்கள் கோவத்தை வென்று கூலாக இருப்பார்கள்: இதில் நீங்களும் உண்டா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
DailynewplugTamil
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by DailynewplugTamil. Publisher: Culture NewsSource
Previous articleMaanaadu review. Maanaadu தமிழ் movie review, story, rating – IndiaGlitz.com
Next articleயமஹாவின் புதிய 1000சிசி எம்டி பைக் – எம்டி-10 எஸ்பி!! 2021 EICMA கண்காட்சியில் வெளியீடு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here